Breaking News

இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் ஏற்படும் பிரச்சனைகள் தீர்வு இதோ

இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் ஏற்படும் பிரச்சனைகள் தீர்வு இதோ
ஆக்சிஜென் மற்றும் ஊட்டச்சத்துகளை உடல் முழுதும் கொண்டு செல்ல இரத்தம் உதவுகிறது. 

போதுமான இரும்பு சத்தை கொண்டு ஹீமோகுளோபின் அளவை அதிகமாக கொண்டுள்ள இரத்தம் ஆரோக்கியமானது என்று அறியப்படுகிறது. 

இரத்தம் தூய்மையாக இருக்க சமச்சீரான இரத்த சர்க்கரை , லிப்பிட், மினெரல் போன்றவை இருக்க வேண்டும். சிறுநீரகம், கல்லீரல் போன்றவை நச்சுக்களை வெளியேற்றி இரத்ததை சுத்தீகரிக்க உதவுகின்றன.

இயற்கையான முறையில் இரத்தத்தை சுத்தம் செய்வதற்கான வழிகளை இந்த பதிவில் பார்ப்போம். 

இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். 

அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.

பீட்ரூட்

பீட்ரூட் சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

முருங்கைக்_கீரை

முருங்கை கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

விளாம்பழம்

விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும். உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.

நாவல் பழம்

நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் இரத்தம் விருத்தி விருத்தியாகும்.

இஞ்சித்தேன்

இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

இலந்தைப் பழம்

இலந்தை பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.

திராட்சை

திராட்சை பழத்தை சாப்பிட்டு வந்தால் சுரத்தை தணித்து மலச்சிக்கலை போக்கி இரத்தம் சுத்தமடையும். திராட்சை பழத்தை கழுவி சாப்பிட்டு வந்தால் சுரத்தை தணித்து மலச்சிக்கலை போக்கி இரத்தம் சுத்தமடையும்.