Breaking News

அடிக்கடி சளி, அலர்ஜி ஏற்படுகின்றத இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க

அடிக்கடி சளி, அலர்ஜி ஏற்படுகின்றதா..?  இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க
     சிலர் அடிக்கடி சளி, அலர்ஜி ஏற்பட்டு அவஸ்தைக்கு உள்ளாகி கொண்டே இருப்பார்கள். அவர்கள் கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றினால் இந்த பிரச்னைகளிலிருந்து எளிதாக விடுபடலாம்.


இஞ்சி

   இஞ்சியில் இருக்கக்கூடிய ஜிஞ்சரால் என்ற வேதிப்பொருள் மூச்சுக்குழல் மற்றும் தொண்டை பகுதிகளில் நுண்ணுயிர் தொற்று ஏற்படாத வண்ணம் தடுக்கிறது ஆகையால் தேநீரில் இஞ்சி கலந்து தினமும் பயன்படுத்தலாம்

பூண்டு

      பூண்டில் இருக்கக்கூடிய அல்லிசின் என்னும் வேதிப் பொருள் நோய் எதிர்ப்பு சக்தி உடையது அதனால் உணவில் அல்லது பச்சையாகவோ பூண்டுகளை எடுத்துக் கொள்வதே ஆரோக்கியத்தை ஏற்படுத்தும்



மஞ்சள்

     மஞ்சளில் இருக்கக்கூடிய குர்குமின் எனும் வேதிப்பொருள் சுவாசப் பாதையில் ஏற்படும் தொற்றுக்களை எதிர்த்து மேலும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றது இதனால் உணவில் மஞ்சள் எடுத்துக்கொள்வது நல்லது

உப்பு

      தினமும் எழுந்தவுடன் உப்பு நீரால் வாயினை சுத்தமாக கொப்பளிக்க வேண்டும் இதன் மூலமாக வாய்ப் பகுதியில் இருக்கக்கூடிய நோய்க் கிருமிகள் அழிந்து விடுகின்றது


தேனும் எலுமிச்சையும்

      ஒரு டம்ளரில் பாதி அளவு எலுமிச்சை சாறும் மீதி அளவு வெந்நீரையும் எடுத்துக் கொண்டு அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து அருந்தினால் சளி மற்றும் அலர்ஜி பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணமாக அமையும் ஏனெனில் தேனிற்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு தன்மை உண்டு மேலும் எலுமிச்சை ஒரு சளி நீக்க மருந்துதாக செயல்படுவதால் இரண்டும் சேர்ந்து நல்ல நிவாரணத்தை கொடுக்கின்றது