Breaking News

கூகிள் ட்ரைவரில் டேட்டாகளை வைத்துதுளிர்களா ? ஆபத்து காத்திருக்கிறது

கூகிள் ட்ரைவரில் டேட்டாகளை வைத்துதுளிர்களா ? ஆபத்து காத்திருக்கிறது
உலகின் முன்னனி இணையதள நிறுவனமான கூகுள் ஸ்மார்ட்போன் வந்ததிலிருந்து நம்முடைய வாழ்வை எளிதாக்கி உள்ளது. சில முக்கிய விஷயங்களை பதிவேற்ற கூகுள் டிரைவ் என்ற சேவையையும் அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக நடத்தி வருகிறது. கூகுள் டிரைவ் எனப்படும் ஆப்பிள் பைல்களை ஸ்டோர் செய்யும் வசதி உள்ளது
இந்த சேவையில் பயனாளிகள் தங்களது கோப்புகளை ஆன்லைனில் சேமித்து வைத்துக் கொள்ளக் கூடியதாகவும் பிறருக்கு பகிர்ந்து கொள்ளக் கூடியதாகவும் உள்ளது.

இந்த கூகிள் டிரைவ் சேவையில் சில குறைபாடுகள் இருப்பதாக தற்போது கருத்துகள் எழுந்துள்ளன. அதற்குக் காரணம், ஹேக்கர்கள் பயனாளர்களின் கூகுள் ட்ரைவ் கணக்கில் நுழைந்து ஹேக் செய்ய வசதியாக இருக்கும் மால்வேர்களை நிறுவுவதற்கு வாய்ப்புள்ளதாக அபாயம் எழுந்துள்ளன.

மால்வேர்களை நிறுவினால் பயனாளர்களின் கணக்குகளை ஹேக்கர்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். இதன் மூலம் பயனாளர்களின் தகவல்களையும் ஹேக்கர்கள் திருடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதுமட்டுமில்லாமல் கோப்புகள் பகிரப்படும் போது அவற்றுடன் சேர்ந்து மல்வேர்களும் பரவக் கூடிய ஆபத்துக்கள் இருக்கலாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஆகவே இதை தடுக்க கூகிள் நிறுவனம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.