நீரிழிவு நோயை எதிர்த்து போராடும் ஆயுர்வேத மூலிகை
நீரிழிவு நோயை எதிர்த்து போராடும் ஆயுர்வேத மூலிகை
உங்கள் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும் வகையில், ஆயுர்வேதத்தில் பல்வேறு மூலிகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் சீந்தில் கொடி. இது ஆங்கிலத்தில் கிலோய் என்றும், டினோஸ்போரா கார்டிபோலியா என்ற தாவரவியர் பெயரையும் கொண்டது.
இதை பொடியாகவோ, கேப்ஸ்யூல் வடிவிலோ பயன்படுத்தலாம். இல்லையென்றால், இதனை சாறாக கூட உட்கொள்ளலாம். டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க ஆயுர்வேதத்தில், இந்த மூலிகை மிகவும் பிரபலமானது. அந்தவகையில் இந்த மூலிகையை எப்படி நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தலாம் என இங்கு பார்ப்போம்.
எப்படி பயன்படுத்தலாம்?
சீந்தில் சாற்றை, அன்றாடம் காலை முதல் உணவாக உட்கொள்வது சிறந்தது.
சீந்தில் இலைகளை தண்டுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிக்கட்டி கொள்ளவும்.
வேண்டுமென்றால், அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம். இல்லாவிட்டால் கடைகளில் விற்கப்படும் சீந்தில் சாற்றையும் வாங்கி குடிக்கலாம்.
நீரிழிவு நோயை எதிர்த்துப் போராட எப்படி உதவுகிறது?
சீந்திலானது உடலில், இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
உடலில் கூடுதலாக உற்பத்தியாகும் குளுக்கோஸை எரிப்பதற்கு பயன்படுகிறது. அதனால் உடலில் இரத்த சர்க்கரை அளவு சீராக்குகிறது.
சீந்திலின் பண்புகள் இரத்தச் சர்க்கரையைக் குறைக்கும் முகவராக செயல்படுவதோடு, குளுக்கோஸ் அளவைக் குறைத்திட உடலுக்கு உதவுகிறது. சீந்தில், குறிப்பிடத்தக்க நீரிழிவு எதிர்ப்பு நடவடிக்கைகளைக் கொண்டுள்ளதாகவும், இன்சுலினுடன் ஒப்பிடும் போது 40 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை அதிக செயல்திறனைக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நீரிழிவு நோயை நிர்வகிப்பதில் ஒரு முக்கிய பகுதியாக, நல்ல செரிமான அமைப்பை பராமரித்து, குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் சீந்தில் உதவுகிறது.