திராட் சை சாறும் அதில் உள்ள சத்துக்களும்
திராட் சை சாறும் அதில் உள்ள சத்துக்களும்
தேவையான பொருட்கள்:
கருப்பு திராட்சை -1
தண்ணீர் – 2 கப்
சர்க்கரை – 2 மேசைக்கரண்டி
உப்பு – 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் திராட்சையை தண்ணீரில் நன்கு அலசிக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்சியில் அதனைப் போட்டு, சர்க்கரை, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் வடிகட்டியை வைத்து, அதில் அரைத்த சாற்றினை ஊற்றி வடிகட்டிக் கொள்ள வேண்டும். இப்போது எளிதான திராட்சை சாறு தயார்.
சத்துகள்:
ஊட்டச்சத்து நிறைந்த பழங்களுள் ஒன்றான திராட்சையில், விட்டமின்கள் பி-1, பி-2, பி-6, பி-12 மற்றும் விட்டமின் சி சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இவைத்தவிர பாஸ்பரஸ், இரும்புச்சத்தும் காணப்படுகின்றன. கோடை காலத்திற்கு ஏற்றது.