Breaking News

வல்லாரைக்கீரையின் நன்மைகள்

வல்லாரைக்கீரையின் நன்மைகள்
வல்லாரைக்கீரை கல்வி அறிவுக்கும், ஞாபக சக்திக்கும் அதிகளவு உதவி செய்கிறது. இதனால் வல்லாரைக்கீரைக்கு "சரஸ்வதி கீரை" என்றும் அழைக்கப்படுகிறது. வல்லாரைக்கீரையில் இருக்கும் நன்மையான விஷயங்கள் குறித்து இனி காண்போம்.

வல்லாரைக்கீரையில் இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, உயிர்சத்து, தாது உப்புகள் போன்று பல சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளது. மேலும், சரியான விகிதமுள்ள உணவு என்பதே இதற்கு சரியான உதாரணமாகவும் கூறலாம்.

பச்சையான வல்லாரைக்கீரையை பறித்த சில மணிநேரத்தில் சாப்பிட்டால், நமது மூளையானது சுறுசுறுப்பாக செயல்படும். நமது நினைவு நரம்புகள் அனைத்தும் தூண்டப்படும். கையளவு வல்லாரைக்கீரையை சாப்பிட்டு, பசும்பாலை குடித்து வந்தால் மாலைக்கண் நோய் சரியாகும்.

வல்லாரைக்கீரையை நன்கு காயவைத்து பொடியாக செய்து, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு சாப்பிடும் போது நெய் கலந்து கொடுக்கலாம். தொண்டையில் கட்டு, காய்ச்சல், உடல் சோர்வு போன்ற பல்வேறு நோய்களுக்கு வல்லாரைக்கீரை சிறந்த தீர்வாக அமையும்.

வல்லாரைக்கீரையை காலை நேரத்தில் மிளகுடன் சாப்பிட்டு வந்தால் உடல் சூடானது குறையும், வல்லாரையை வைத்து பற்கள் துலக்கி வந்தால் பற்களின் மஞ்சள் நிறம் மாறும், வல்லாரை துவையில் மலச்சிக்கலுக்கு அருமருந்தாகும். குடல் மற்றும் வயிற்று புண்களுக்கு அருமருந்து. வல்லாரைக்கீரையுடன் தூதுவளையை சேர்த்து ஒரு தே.கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் இருமல் மற்றும் சளியானது நீங்கும்.