Breaking News

பெண்களுக்கு நன்மை செய்யும் வாழை மரம்

பெண்களுக்கு நன்மை செய்யும் வாழை மரம்
  வாழை தண்டு வாரத்தில் ஒரு முறை சாப்பிட்டு வர சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைக்க உதவுகிறது. சிறுநீர் எரிச்சலை குணப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும். குறிப்பாக வயிற்று புண்ணை குணப்படுத்தும் சிறந்த இயற்கை உணவு இந்த வாழைத்தண்டு தான்.

 வாழைப்பூவை வாரத்தில் ஒரு முறை சாப்பிட்டு வர, மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யும். பெண்கள் இந்த வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கோளாறு, வெள்ளைப்படுதல், வயிற்று வலி போன்ற அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும். வாழைப்பூவை தினமும் சாப்பிட்டு வர இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து இரத்தத்தை சுத்திகரிக்கும். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்றவை வராமல் தடுக்கும்.