Breaking News

இனி உடனடி இ- பாஸ் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

    இனி உடனடி இ- பாஸ் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
 தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரொனொ தொற்று வராமல் தடுக்க, ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது தமிழக அரசு.


        இ-பாஸ் வழங்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. திருமணம் ,உறவுகளின் மரணம், சிகிச்சை உள்ளிட்ட கட்டாய தேவைகளுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் இ-பாஸ் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் உடனடியாக இ-பாஸ் வழங்கப்படும் என்றும் பொதுமக்கள் அவசியம் என்றால் மட்டும் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.