நகங்கள் ஆரோக்கியமாக இருக்க சில எளிய டிப்ஸ்
நகங்கள் ஆரோக்கியமாக இருக்க சில எளிய டிப்ஸ்
பூண்டு மற்றும் எண்ணெய் மசாஜ் உங்கள் நகங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு பயன்படுகிறது.
சருமம், தலைமுடி மட்டுமல்லாமல் நகங்களையும் நாம் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். பொதுவாக பெண்கள், தங்கள் நகங்கள் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். விதவிதமாக நெயில் பாலிஷ் போட்டு அழகு பார்ப்பார்கள். ஆனால் ஒரு சிலருக்கு நகங்களில் போதிய வலு இல்லாமல் அடிக்கடி உடைந்து விடும். இதனால் உங்களுக்கு வலி ஏற்படவும் வாய்ப்புள்ளது. வீட்டு வைத்தியங்கள் மீதான மக்களின் ஆர்வம் தற்போது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அப்படி நீங்களும் விரும்பினால், உங்கள் நகங்களை இயற்கையாகவே ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்திருப்பதற்கான சில வழிகளை இங்கே பார்ப்போம்.
பூண்டு:
உடல் ஆரோக்கியத்தில் பூண்டிற்கு அதிக பங்கு இருக்கிறது. நோய்த்தொற்றுகளில் இருந்து விலகி இருக்க நீங்கள் கட்டாயம் பூண்டை சேர்த்துக் கொள்ள வேண்டும். நகங்கள் பராமரிப்பு என்று வரும் போதும், பூண்டு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பூண்டை பாதியாக நறுக்கி, அதில் வரும் சாறை நகங்களில் நன்றாக தேய்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் அவை வலுவுடன் இருக்கும். குறிப்பாக அடிக்கடி உடையக்கூடிய நகங்களை கொண்டவர்களுக்கு இது நல்ல பலனை தரும். தினந்தோறும் குறைந்தது ஒரு நிமிடம் இந்த முறையை பின்பற்றுங்கள்.
எண்ணெய் மசாஜ்:
உங்கள் தலைமுடியை போலவே நகங்களுக்கும் எண்ணெய்கள் தேவை. நகங்களை அவ்வப்போது ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். ஆலிவ் ஆயில், Tea tree oil, வைட்டமின் ஈ ஆயில் உள்ளிட்டவைகளை சில துளிகள் சேர்த்து ஒன்றாக கலந்து வெற்று நெயில் பாலிஷ் பாட்டில் ஒன்றில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். இதனை தினமும் உங்கள் நகங்களில் தடவி வர பளபளப்பாக இருப்பதை உணர முடியும். மேலும் நகங்களும் வலுவாக இருக்கும்.
அதேபோல் பூண்டையும் சாறு எடுத்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.