அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
இன்று (13.08. 2020) முற்பகல் நடைபெற்ற காணொளிக்காட்சி கூட்டத்தில் மதிப்பிற்குரிய சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் சொல்லப்பட்ட கீழ்க்கண்ட தகவல்களை கண்டிப்பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், மற்றும்
ஆசிரியர்களும் தவறாமல் பின்பற்றும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
1. 15. 08. 2020 அன்று பள்ளியில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் ஆசிரியர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும். விருப்பமுள்ள மாணவர்கள் கலந்து கொள்ளலாம். மற்ற மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வரும் ஆசிரியர்களும், மாணவர்களும் கண்டிப்பாக இவ்விழாவில் கலந்து கொள்ளக்கூடாது.
2. EMIS Portal ல் உள்ளீடு செய்யப்பட்ட TC யைத்தான் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.மாணவர்களுக்கு வழங்கப்படும் EMIS TC ன் ஒரு பிரதியை நகலெடுத்து கண்டிப்பாக பள்ளியில் வைத்து பராமரிக்கப்பட வேண்டும்.
3.13. 08. 2020 இன்று முதலே தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ்களை வழங்கலாம்.
4.17. 08. 2020 முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு முடிய மாணவர்களை சேர்க்கலாம்.
5.LKG வகுப்புகளுக்கு சேர்க்க சொல்லி உரிய அறிவிப்பு வரும் வரை மாணவர்களை சேர்க்கக்கூடாது.
6.பள்ளி வயது பிள்ளைகளை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், அதிக அளவிலான குழந்தைகளை அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் முனைப்புடன் சேர்க்கப்பட வேண்டும்.
7.17. 08. 2020 முதல் வேலை நாட்களில் நாள்தோறும் தலைமையாசிரியர் பள்ளியின் வேலை நேரம் முடிய, பள்ளியில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
8.சேர்க்கைக்காக வரும் பெற்றோர்கள் தலைமை ஆசிரியர் இல்லை என்று எந்த ஒரு நிலையிலும் திரும்பி சென்றுவிடக்கூடாது.
9.சேர்க்கை அன்றே மாணவர்களுக்கு அவர்தம் வகுப்புக்குரிய பாடநூல்களை வழங்கப்பட வேண்டும்.
10.சேர்க்கையின் பொழுது மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் சமூக இடைவெளி விட்டு வெளியிலோ, பள்ளி வளாகத்திலோ அமரச் சொல்லாமல், வகுப்பறையில் அமர வைக்க வேண்டும்.
11.பள்ளி வளாகம், குடிநீர், கழிப்பறை ஆகியவை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
12.மேற்கண்ட நிகழ்வுகள் அனைத்தும் Covid - 19 பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டும், எந்த ஒரு புகாருக்கு இடமின்றி யும் செயல்படும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறது.