இனி அரிசி கழுவிய நீர் போதும்! கூந்தலையும் முகத்தையும் பொலிவாக்கலாம்
இனி அரிசி கழுவிய நீர் போதும்! கூந்தலையும் முகத்தையும் பொலிவாக்கலாம்
நம் வீடுகளில் அரிசி கழுவிய நீரை, செடிகளுக்கு அல்லது கால்நடைகளுக்கு பயன்படுத்தும் பழக்கம் உண்டு. உண்மையில், அரிசி கழுவிய நீரில் உள்ள மகத்துவங்கள் தெரிந்தால் அதனை வீணாக்க மாட்டார்கள். அப்படி அரிசி கழுவிய நீரில் என்ன அற்புதம் இருக்கின்றது தெரியுமா..?

அரிசி கழுவிய நீரைக் கொண்டு முகம் கழுவும் பொழுது அடைப்பட்டிருந்த சருமத் துளைகள் திறக்கப்பட்டு சருமத்திற்கு பொலிவினை ஏற்படுத்துகின்றது.
அதுபோல குளிக்கும் பொழுது முதலில் அரிசி கழுவிய நீரை பயன்படுத்தி கூந்தலை அலசி கொண்டு அதன் பின்னர் சாதாரண நீரை பயன்படுத்தலாம். இதன்மூலமாக கூந்தலில் இருக்கக்கூடிய வறட்சித் தன்மை நீங்கி பொலிவைப் பெறுகின்றது. ஒரு முறை அல்லது இரு முறை அரிசியை அலசிய நீரை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் அந்த வாசனை உங்களுக்கு பிடிக்காமல் இருந்தால் வாசனை திரவியங்களை சிறிதளவு கலந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
சில நேரங்களில் அரிசி கழுவிய நீர் புளித்த பின்னர் பயன்படுத்தினால் கூடுதல் பலன் கிடைக்கும் என்று கூறுபவர்களும் உண்டு.