Breaking News

அக்டோபரில் கல்லூரிகள் மீண்டும் திறப்பு உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

அக்டோபரில் கல்லூரிகள் மீண்டும் திறப்பு உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு
  கர்நாடக ஊரடங்கு விதிமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தி அங்கு இயல்பு வாழக்கை திரும்பி வருகிறது. மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தை மீண்டும் தொடங்கவதற்கான அந்த மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட கல்லூரிகளை திறக்க அம்மாநில உயர்கல்வித்துறை முடிவுசெய்துள்ளது. அதன்படி, அக்டோபரில் கல்லூரிகளை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் சி.என்.அஷ்வத்நாராயண் தெரிவித்துள்ளார்.

   இது தொடர்பாக டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள டிவிட்களில், பட்டபடிப்பு கல்லூரிகள் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் மீண்டும் செயல்பட தொடங்கும். அதுவரையில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் ஆன்லைனில் வகுப்புகள் நடைபெறும். செப்டம்பர் மாதத்தில் சில டிகிரி தேர்வுகளை நடத்த வேண்டி உள்ளதால் அடுத்த மாதம் முதல் அனைத்து கல்வி நடவடிக்கைகளிலும் ஆன்லைன் ஊடகத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்.

 கல்லூரிகள் திறப்பது தொடர்பாக மத்திய அரசிடமிருந்து வழிகாட்டு விதிமுறைகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம், மாநில அரசும் இது தொடர்பாக கூடுதலாக எந்தவொரு உத்தரவுகளும் வெளியிட வாய்ப்புள்ளது. மீண்டும் கல்லூரி திறந்ததும் அனைத்து இளங்கலை, டிப்ளோமா மற்றும் பொறியியல் மாணவர்களுக்கும் இறுதி ஆண்டு தேர்வுவை உடனடியாக நடத்தி முடிக்கப்படும் என்றார்.