Breaking News

அரசு கல்லூரிகளில் வரும் 28ஆம் தேதி முதல் அட்மிஷன்

அரசு கல்லூரிகளில் வரும் 28ஆம் தேதி முதல் அட்மிஷன்
      அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் வரும் 28 ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

  12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலமாக தொடங்கிவிட்டது. அதை தொடர்ந்து அரசு கலைக் கல்லூரிகளில் வரும் 28 ஆம் தேதி முதல் அட்மிஷன் தொடங்க உள்ளது. இந்நிலையில் அரசு கல்லூரிகளில் இளநிலை பட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

  மாணவர்கள் விண்ணப்ப தரவுகளை சரிபார்ப்பது கல்லூரி முதல்வர், சேர்க்கை குழுவின் பொறுப்பு என்றும் மாணவர்களிடம் ஆவணங்களை பெற செல்போன் எண் மூலம் தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர் 11 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளாரா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால் கடந்த கல்வியாண்டு பின்பற்றியதை போல 20% கூடுதல் இடங்களுக்கு அரசின் ஒப்புதல் கோரப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.