200, 500, 2000 ரூபாய் நோட்டுகள் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
200, 500, 2000 ரூபாய் நோட்டுகள் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ரிசர்வ் வங்கி 2019-20ம் நிதியாண்டிற்கான ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை, 2019 மார்ச் மாத இறுதியில் 32,910 லட்சமாகவும், 2020 மார்ச் மாத இறுதியில் 27,398 லட்சமாகவும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரூ.500 மற்றும் ரூ.200 மதிப்புள்ள நோட்டுக்களின் புழக்கம் கணிசமாக உயர்ந்துள்ளது. 2019-20ம் ஆண்டில் ரூ.2,000 நோட்டுகளை அச்சிடவில்லை. ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட, 13.1 சதவீதம் குறைந்துள்ளது.
சோதனை அடிப்படையில் 100 ரூபாய் மதிப்புள்ள வார்னிஷ் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், மக்களுக்கு எந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களின் தேவை அதிகம் உள்ளது என்பதை கணக்கெடுப்பு நடத்தி, அதன் முடிவுகளை கொண்டு ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க உள்ளதாகவும் ரிசர்வ் வாங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் 500 ரூபாய், 200 ரூபாய் நோட்டுக்களின் பயன்பாடு மிக அதிகமாக உயர்ந்து வருவதாகவும் ரிசர்வ் வாங்கி தெரிவித்துள்ளது.