10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்
சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் முடிவெடுக்கப்படும். மும்மொழிக் கொள்கை தொடர்பாக முதலமைச்சர் ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டார். 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும். ஐடெக் லெப் மூலம் மாணவர்கள் அனைத்து பாடங்களையும் படிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.