Breaking News

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு- 100% தேர்ச்சி..! மாணவர்கள் கொண்டாட்டம்..

            தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்விற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.


         தமிழகத்தில் மார்ச் 22ஆம் தேதி முதல் கொரொனா தொற்றுகாரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த நேரத்தில் நடக்கவிருந்த பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு அதனடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.

         அதன்படி இன்று காலை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு முடிவுகள், பள்ளியில் கொடுக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டது.தேர்வின் முடிவில் 4,71,759 மாணவர்களும் 4,68,070 மாணவிகளும் தேர்ச்சிபெற்று அனைத்து மாணவ மாணவியரும் 100% பெற்றிருக்கின்றனர்.

       மேலும் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும், மதிப்பெண் குறைபாடுகள் ஏதேனும் இருப்பின் மாணவர்கள் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.