10 ,12ஆம் வகுப்பு சான்றிதழ் பெற்றவர்கள் ஆன்லைனில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்
10 ,12ஆம் வகுப்பு சான்றிதழ் பெற்றவர்கள் ஆன்லைனில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்
பள்ளிகள் திறப்பது குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் குறைந்த பிறகு தான் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதனிடையே தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் அரசுப் பள்ளிகளிலும் அதற்கான வழிமுறைகள் தொடங்கப்பட்டு விட்டன. கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் மாணவர்களுக்கு கற்பித்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீண்டும் உறுதிப்பட கூறியுள்ளார். மேலும் கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கும் சிறப்பான கல்வி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
10 ,12ஆம் வகுப்பு சான்றிதழ் பெற்றவர்கள் ஆன்லைனில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.