Breaking News

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தயாராக வைத்திருக்க உத்தரவு

         பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான நிலையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து, தயாராக வைத்திருக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், கடந்த மார்ச்சில் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு, வெளியிடப்பட்டது.
    இந்நிலையில், அனைத்து வகை பள்ளிகளில், அந்தந்த மாணவ, மாணவியரின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள விபரங்களை சரிபார்த்து, தலைமை ஆசிரியர் கையொப்பமிட்டு, தயாராக வைத்திருக்க, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.