Breaking News

தினம் ஒரு தகவல்.....சுவாரசியமான பல நிகழ்வுகளை LINK உள்ளேபோய் காணலாம்!

தினம் ஒரு தகவல்.....சுவாரசியமான பல நிகழ்வுகளை LINK உள்ளேபோய் காணலாம்!
முக்கிய நிகழ்வுகள்..

சர்வதேச விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் தினம்

👉 விளையாட்டின் மேம்பாட்டிற்கான பத்திரிக்கையாளர்களின் சேவையை அடையாளப்படுத்திக் காட்டுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 02ஆம் தேதி சர்வதேச விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மயில்சாமி அண்ணாதுரை

🌟 தனது பொறியியல் படிப்பை முடித்தவுடன் இஸ்ரோ நிறுவனத்தில் இளநிலை ஆய்வாளராக 1982ஆம் ஆண்டு சேர்ந்தார். இவரது திறமையால் செயற்கைக்கோள் முடுக்கியை உருவாக்கும் அணியின் தலைவராக 1985ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

🌟 பிறகு செயற்கைக்கோள் விண்கலன் இயக்க மேலாளர் (1988), இன்சாட் துணை இயக்குநர் (1994), மேலும் இன்சாட்-2சி, இன்சாட்-2டி, இன்சாட்-3பி, ஜிசாட்-1 ஆகியவற்றின் திட்ட இயக்குநராகவும் பணியாற்றினார்.

🌟 2004ஆம் ஆண்டு சந்திரயான் திட்ட இயக்குநரானார். அதுமட்டுமல்லாது தொலையுணர்வு செயற்கைக்கோள், மங்கள்யான் போன்றவற்றின் தலைமை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

🌟 மேலும் அஸ்ட் ரோசாட், ஆதித்யா- L1 செயற்கைக் கோள்களை வழிநடத்தியுள்ளார். இவர் பத்மஸ்ரீ, சந்திரயான் திட்டத்திற்காக 3 சர்வதேச விருதுகள், 4 விண்வெளி விருதுகள், பல்வேறு அமைப்புகளின் கௌரவ விருதுகளையும் பெற்றுள்ளார்.

👉 1844ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி ஐஸ்லாந்தில் கடைசி ஜோடி பெரிய ஓக் பறவைகள் கொல்லப்பட்டன.

எஸ்.ஆர்.நாதன்

🏁 சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் என்று அழைக்கப்படும் செல்லப்பன் ராமநாதன் 1924ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி சிங்கப்பூரில் பிறந்தார்.

🏁 இவர் 1955ஆம் ஆண்டு மருத்துவ சமூக சேவகராக சிங்கப்பூர் சிவில் சேவையில் (Singapore civil service) தனது தொழிலைத் தொடங்கினார். மேலும் அரசுத் துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இவர் திறம்பட பணியாற்றினார். அதன்பின் அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளை வகித்தார்.

🏁 1999ஆம் ஆண்டு சிங்கப்பூர் அதிபராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டார். அவர் அதிபர் பதவியேற்ற போது உலகம் முழுவதும் பொருளாதார தேக்க நிலை நிலவியது. அதிலிருந்து சிங்கப்பூரை அவர் மீட்டு வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தினார். இதன் காரணமாக 2005ஆம் ஆண்டில் இவர் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

🏁 தமிழக வம்சாவளியிலிருந்து சிங்கப்பூர் ஜனாதிபதியாக உயர்ந்த எஸ்.ஆர் நாதன் 2016ஆம் ஆண்டு மறைந்தார்