Breaking News

ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வுகளை வழங்கிட தடையேதும் இல்லை - CEO தெளிவுரை

ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வுகளை வழங்கிட தடையேதும் இல்லை CEO தெளிவுரை
1997-2000 ஆம் ஆண்டுகளில் SC / ST பிரிவினருக்கான இடைநிலை ஆசிரியர் பின்னடைவு பணியிடங்களில் பணியமர்த்தப்பட்டு தற்பொழுதும் , இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களாக பணிபுரிந்து வருபவர்களுக்கு ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டும் அரசாணையில் வழங்கப்பட்டுள்ள நெறிமுறைகளின்படி அவ்வாசிரியர்கள் M.A. , M.Sc , M.Ed போன்ற முதுகலைப்பட்டம் ஆகியவற்றிற்கு ஊக்க ஊதியம் அனுமதித்து ஆணையிடலாம் என இம்மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரக் கல்வி வலயர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது .

அரசு ஊழியர்களுக்கான முன்ஊதிய உயர்வுகளை மட்டுமே இரத்து செய்து ஆணையிடப்பட்டுள்ளதால் அரசாணை எண் .42 பள்ளிக்கல்வித் துறை நாள் .10.01.1969 மற்றும் அபார்வை என் .747 பள்ளிக்கல்வித் துறை நாள் .18.08.1986 ன் அடிப்படையில் ஆசிரியர்கட்கு வழங்கப்பட ஊக்க ஊதிய உயர்வுகளை வழங்கிட தடையேதும் இல்லையென்றும் அனைத்து வட்டாக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.