இன்று CBSE 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகளை அறிவிக்கும் என்று யூகங்கள் எழுந்தன. ஆனால் அனைத்து குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) அறிவிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் தெரிவித்துள்ளார்.
அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், "என் அன்பான குழந்தைகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களே, பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளின் முடிவுகள் நாளை அறிவிக்கப்படும். அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://cbseresults.nic.in என்ற தளத்தில் மாணவர்கள் முடிவுகளைக் காணலாம்.
கடந்த ஆண்டு, சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வில் சுமார் 91.1 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர், அவர்களில் 92.45 சதவீதம் பெண்கள், 90.14 சதவீதம் ஆண்கள் மற்றும் 94.74 சதவீதம் திருநங்கைகள் ஆவர். 2019 ஆம் ஆண்டில், 500-க்கு 499 மதிப்பெண்களை 13 மாணவர்கள் பெற்றிருந்தனர்