BREAKING: தமிழகத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் அறிவிப்பு
BREAKING: தமிழகத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 6,426 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,34,114 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 97,575 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை செய்த பின்னர் உரையாற்றிய முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருப்பதாகவும் மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் விரைவில் பழைய நிலைக்கு திரும்ப முடியும் என்று கூறினார்.
இதனிடையே பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கை நீட்டிப்பதா இல்லையா என்பது குறித்து இன்று மருத்துவக் நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.
அந்த ஆலோசனை கூட்டம் பிற்பகல் 12 மணிக்கு நிறைவடைந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதே போல தற்போது இருக்கும் ஞாயிற்று கிழமைகளில் ஊரடங்கு முறை தொடரும் என்றும் ரூ.10,000க்கு மேல் வருவாய் இருக்கும் வழிபாட்டுத் தலங்களில் மக்களுக்கு அனுமதி கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் 50% இருக்கைகளில் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படும் என்றும் கடைகள் இனிமேல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.