தேங்காய் எண்ணெய் அழகு குறிப்புகள்..
தேங்காய் எண்ணெய் அழகு குறிப்புகள்..! Coconut Oil
தேங்காய் நமது தேகத்தை உச்சி முதல் பாதம் வரை பாதுகாக்கிறது என்று தெரியுமா உங்களுக்கு? அட ஆமாங்க தேங்காய் சருமத்திற்கு அதிகளவு பொலிவையும், பளபளப்பையும் அள்ளித்தர உதவுகிறது. சரி சருமத்தை பாதுகாக்கும் தேங்காய் எண்ணெய் அழகு குறிப்புகள் சிலவற்றை படித்தறிவோம் வாங்க..!
தேங்காய் எண்ணெய் பயன்கள் 1:
தேங்காய்எண்ணெயில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் சருமத்திற்கு அடியில் தங்கி, சருமத்தை மென்மையாகவும், வறட்சியின்றியும் வைத்துக் கொள்ள உதவும்.
தேங்காய் எண்ணெய் பயன்கள் 2:
இதில் காப்ரிக், காப்ரிலிக் மற்றும் லாரிக் ஆசிட் உள்ளது. இவை சருமத்தில் எந்த ஒரு கிருமிகளும் தாக்காமல் தடுக்கும். அதுமட்டுமின்றி, தேங்காய் எண்ணெயில் சருமத்திற்கு தேவையான வைட்டமின் ஈ மற்றும் புரோட்டீன் வளமாக நிறைந்துள்ளது.
தேங்காய் எண்ணெய் பயன்கள் 3:
அதிகமாக மேக்-அப் போடும் பெண்கள், இரவில் முகத்தை சுத்தம் செய்து விட்டு தேங்காய் எண்ணெயை தடவிக் கொண்டு படுக்கலாம். இதனால் சருமத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும்
தேங்காய் எண்ணெய் பயன்கள் 4:-
கால்களில் உள்ள முடிகளை நீக்குவதற்கு முன், தேங்காய் எண்ணெயை கால்களில் தடவிய பின்பு ஷேவிங் செய்தால், ஷேவிங் செய்த இடம் மென்மையாக இருப்பதோடு முடி எளிதில் வெளிவரும்.
தேங்காய் எண்ணெய் பயன்கள் 5:-
தினமும் தேங்காய் எண்ணெயைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்பட்டு, முதுமைத் தோற்றம் தள்ளிப் போடப்படும். வழுக்கை தேங்காயை நன்றாக அரைத்து கொண்டு, அதனுடன் சில துளிகள் இளநீர் கலந்து முகத்தில் கீழ் இருந்து மேல் நோக்கி மசாஜ் செய்து சில நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இந்த முறையை தொடர்ந்து செய்துவர முகத்தில் தோன்றும் கரும் புள்ளிகள் விரைவில் மறையும்.
கருப்பான சருமத்திற்கு அழகு குறிப்புகள் :-
வெயில் காலத்தில் சூரியஒளி பட்டு சருமம் கருப்பாவது வழக்கம். இந்த பிரச்சனையை சீர் செய்வதற்கு தேங்காய் உதவுகிறது. தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை மாவு 1 ஸ்பூன் எடுத்து இரண்டையும் கலந்து பேஸ்டு போல் செய்து கொள்ளவும். இந்த பேஸ்டை முகத்தில் பூசி சில நேரங்கள் காத்திருக்கவும். பின்பு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த முறையை வாரம் இரு முறை தொடர்ந்து செய்து வர வெயில் தாக்கத்தினால் கருமை அடைந்த சருமம் பொலிவு பெரும்.
சரும பாதுகாப்பிற்கு – அழகு குறிப்புகள் :-
தேங்காய் எண்ணெய் சருமத்தை பாதுகாப்பதில் மிகச்சிறந்த பலனைத் தருகிறது. சரும வறட்சியை போக்குவதில் சிறந்த மாய்ஸரைசராக செயல்படுகிறது. இதில் உள்ள கொழுப்புச்சத்து சரும சுருக்கத்தை போக்குகிறது. இதனால் சருமத்திற்கு எவ்வித பக்கவிளைவும் ஏற்படுவதில்லை. சரும நலனை பாதுகாப்பதில் விலைகுறைவான பாதுகாப்பான பொருள் தேங்காய் எண்ணெயாகும்.
தலையை பாதுகாக்கும் – அழகு குறிப்புகள் :
தலைக்கு ரசாயனம் கலந்த கண்ட எண்ணெயை பூசுவதற்கு பதிலாக தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இதனால் தலையின் தோல் பகுதியை வறண்டு விடாமல் தேங்காய் எண்ணெய் பாதுகாக்கும். மேலும், குளிப்பதற்கு முன்பும் தேங்காய் எண்ணெயை உடல் முழுவதும் பூசிக் கொண்டு ஊறவிட்டுக் குளிக்கலாம்.
கூந்தல் பாதுகாப்பு – அழகு குறிப்புகள்:
கூந்தலை பாதுகாப்பதில் தேங்காய் எண்ணெய்க்கு நிகர் எதுவுமில்லை. சுத்தமான தேங்காய் எண்ணெயில் புரதச் சத்து காணப்படுகிறது. இந்த எண்ணெயை வாரம் ஒருமுறை தலையில் ஊறவைத்து குளிப்பதன் மூலம் கூந்தலின் வேர்க்கால்கள் பலமடையும், பொடுகுத் தொல்லைக்கு நிவாரணம் கிடைக்கும்.
மன அழுத்தம் நீக்கும்:
பணிச்சூழல் காரணமாக மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு. இதனால் முகமானது கலை இழந்து காணப்படும். தேங்காய் எண்ணெய் மன அழுத்தம் நீக்கி முகத்தை பொலிவாக்குகிறது. தேங்காய் எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்வதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற வலிகள் நீங்கும்.
தோல் நோய்களை நீக்க – தேங்காய் அழகு குறிப்புகள் :-
தேங்காய் எண்ணெயில் உள்ள பாக்டீரிய எதிர்ப்புப் பொருள் தோல் பூஞ்சை நோய்களை கட்டுப்படுத்துகிறது. உடலுக்கு மட்டுல்லாது குடலுக்கும் பாதுகாப்பு தருகிறது. ஜீரண சக்தியை சீராக்கி மலச்சிக்கலை நீக்குகிறது. இதனால் தோல்களில், முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படுவது நீங்குகிறது.
தேங்காய் நீர் – அழகு குறிப்புகள் :-
தேங்காய் நீரை முகத்தில் தடவியபின் காய்ந்ததும் கழுவி விடுங்கள். இது சருமம் ஜொலிக்க வைக்கும். முகமும் நிறம் பெறும்