பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் வெளியீடு
பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் வெளியீடு
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் கட்டுப்பாட்டு மையமாக விளங்குவது அண்ணா பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் ஏராளமான இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளின் சமீபத்திய தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் தனது இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறது. இவற்றில் மாணவர்கள் தேர்ச்சி தற்போது வெளியாகி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், ஏராளமான கல்லூரிகள் 20 சதவீதத்திற்கு குறைவான தேர்ச்சி பெற்றிருப்பது அம்பலமாகி உள்ளது.
ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத கல்லூரிகளும், 20 சதவீதத்திற்கு கிழ் தேர்ச்சி விகிதம் உள்ள கல்லூரிகளின் பட்டியலும் அதில் இடம் பெற்றுள்ளன. அதன்படி 13 கல்லூரிகளில் 5% க்கும் குறைவாகவும், 38 கல்லூரிகளில் 10%க்கும் குறைவாகவும் தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. 2 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 521 கல்லூரிகளில் 2 கல்லூரிகளில் மட்டுமே 90% க்கு மேல் சதவீதம் தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, தரமான ஆசிரியர்கள் இல்லாதது, மாணவர்களுக்கு கற்றலுக்கு ஏற்ற உபகரணங்கள் இல்லாதது போன்றவை காரணமாக ஏராளமான கல்லூரிகளில் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.