சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் எடை குறைக்கும் நடைப்பயற்சியில் கடைபிடிக்க வேண்டியவை
சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் எடை குறைக்கும் நடைப்பயற்சியில் கடைபிடிக்க வேண்டியவை
நடைப்பயிற்சி ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதய தசைகள் மற்றும் நுரையீரலை உறுதிப்படுத்துகிறது. மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அளவைக் குறைக்க உதவுகிறது. தசைகளில் இருக்கம், வலி உள்ளிட்டவை வராமல் காக்கிறது. தசைகள், எலும்புகளை வலுப்படுத்துகிறது. இதன் மூலம் நம்முடைய உடலின் பேலன்ஸ் உறுதி செய்யப்படுகிறது.
ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.
கலோரி எரிக்கப் படுவதால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது.
சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
நடக்கும்போது நேராக நிமிர்ந்து பார்த்து நடக்க வேண்டும்.