Breaking News

தமிழ் மொழி பற்றி உங்களுக்கு தெரியாத பத்து விஷயங்கள்

தமிழ் மொழி பற்றி உங்களுக்கு தெரியாத பத்து விஷயங்கள்
உலகின் மிகத் தொன்மை வாய்ந்த மொழிகளுள் ஒன்று தான் தமிழ்மொழி. இதனை உணர்த்தும் விதமாக உலகின் பல இடங்களில் தமிழ்மொழியின் வடிவத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் பல கிடைத்துள்ளன. திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கு முந்தியது. ஆகவே தமிழ்மொழியானது சுமார் 2300 ஆண்டுகளுக்கும் முன்பிருந்து இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. தமிழ் மொழி எப்படி பிறந்தது என்று தெரியுமா? இதுப்போன்று இன்னும் ஏராளமான சிறப்புக்களைக் கொண்டிருப்பது தான் தமிழ்மொழி. இத்தகைய தமிழ்மொழியைப் பற்றி ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இங்கு தமிழ்மொழிப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள். 

தகவல் 1 

  உலகில் சுமார் 72 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தமிழ்மொழியை பேசுகின்றனர். 

தகவல் 2 

  உலகத்தில் தமிழ் பேசும் மக்களில் கால் அளவு மக்களுக்கு தமிழைப் படிக்கவோ, எழுதவோ தெரியாது. 

தகவல் 3 

  நம் தமிழ்மொழி திராவிட குடும்பத்தைச் சேர்ந்த ஓர் முதன்மையான மொழியாகும். 

தகவல் 4 

  தமிழ்மொழி தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர் மற்றும் பாண்டிச்சேரிகளில் தான் அதிகம் பேசப்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதிகளில் தமிழ்மொழியே அரசு அலுவல் மொழியாக உள்ளது. 

தகவல் 5 

  உலகில் 6809 மொழிகள் உள்ளன. அதில் பேசும் மற்றும் எழுதும் மொழிகள் 700, தனி எழுத்துக்களைக் கொண்ட மொழிகள் 100. அதில் ஆறு பொது மொழிகள். அவை ஹிப்ரூ, கிரேக்கம், லத்தின், சமஸ்கிருதம், சீன மற்றும் தமிழ். ஆனால் அதில் தமிழ், சீன மற்றும் ஹிப்ரூ மொழிகள் தான் இன்று வரை பேசப்பட்டும், எழுதப்பட்டும் வருகின்றது. 

தகவல் 6

   உலகில் மனிதர்களுக்கு தெரிந்த முதல் மொழி தமிழ் என்பதை ஆய்வாளர் அலெக்ஸ் கோலியர் கூறுயிருக்கிறார். Brokerage as low as 0.15%|Open ICICIdirect A/C with Prime subscription ICICIdirect 

தகவல் 7

 தமிழ்மொழியானது கிட்டத்தட்ட 22 விதமாக மக்களால் பேசப்பட்டு வருகிறது. 

தகவல் 8 

  உலகிலேயே இடமிருந்து வலமாக எழுதப்படும் மொழிகளில் மிகவும் பழமையானது தமிழ் மட்டும் தான். எப்படி தமிழ் எழுதப்பட்டதோ, அதேப் போல் தான் இன்று பல மொழிகள் இடமிருந்து வலமாக எழுதப்படுகின்றன.

 தகவல் 9 

  இதுவரை இந்தியாவில் கிடைத்த 1 லட்சம் கல்வெட்டுக்களில் 60,000-த்திற்கும் அதிகமானவை தமிழிலும், மற்ற மொழிகள் 5 சதவீதத்திற்கும் குறைவான கல்வெட்டுக்களையும் கொண்டுள்ளன. இதிலிருந்து குமரி கண்டத்தில் தோன்றிய முதல் மொழி தமிழ் என்று கூறலாம். 

தகவல் 10 

  தமிழ் மொழியைக் கற்கும் போது, முதலில் நாம் கற்கும் எழுத்து அ, அதேப் போல் முதற்சொல் 'அம்மா'. இதை யாராலும் மறுக்க முடியாது. இச்சொல் தமிழ் கோட்பாட்டைப் பிரதிபலிக்கிறது. எப்படியெனில், அ என்னும் எழுத்து உயிர் எழுத்தையும், ம் என்னும் எழுத்து மெய் எழுத்தையும், மா என்னும் எழுத்து உயிர்மெய் எழுத்தையும் குறிக்கிறது.