Breaking News

குழந்தைகளின் ஸ்பெல்லிங் திறன் மேம்பட வேண்டுமா? இதை மட்டும் ட்ரை பண்ணுங்க ...



ஸ்பெல்லிங்


    ஸ்பெல்லிங் எனப்படும் எழுத்துக்கள்தான் ஒரு வார்த்தையை உருவாக்குவதற்கான மூலாதாரங்கள். ஆனால், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால், படிப்பதற்கும், எழுதுவதற்கும் துணைபுரிய பல சாதனங்கள் வந்துவிட்டதால், ஸ்பெல்லிங் தொடர்பான பழக்கங்கள் குறைந்துவிட்டன.

         U cn narrate stories n 2nds என்ற ஒரு வார்த்தை. இந்த வார்த்தையை, உங்களால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறதா? Gadgets ஆதிக்கம் செலுத்தும் இந்த உலகில், அதிகம் பாதிக்கப்பட்டது ஸ்பெல்லிங்தான்.

       எண்ணங்களையும், சிந்தனைகளையும் செம்மையான முறையில் பகிர்ந்து கொள்வதில், எழுதுதலும், ஸ்பெல்லிங்கும் முக்கியப் பங்காற்றுகின்றன. பல பெரியவர்கள்கூட, எளிமையான வார்த்தைகளுக்கே, ஸ்பெல்லிங் தெரியாமல் திணறுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம், ஸ்பெல்லிங் தொடர்பாக நாம் கொடுக்கும் குறைந்தளவு முக்கியத்துவம்தான். இது தொடர்பான பயிற்சி, மிக இளம் வயதில், வீட்டிலிருந்தே தொடங்கப்பட வேண்டும்.

        பள்ளிகளில், மாணவர்களின் ஸ்பெல்லிங் திறனை சிறப்பாக்கும் வகையில், சில பயிற்சிகள் வழங்கப்பட்டாலும், அந்த திறனை மேலும் சிறப்பாக்க, இந்தக் கட்டுரை சில பயனுள்ள வழிமுறைகளைப் பற்றி ஆய்கிறது. அந்த வழிமுறைகளை, குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம், அவர்களின் ஸ்பெல்லிங் திறன் வளர்ச்சியடையும்.


WORD JEOPARDY (வர்ட் ஜியோபர்டி)

           வார்த்தை இணைப்பு மற்றும் ஸ்பெல்லிங் ஆகியவை கலந்தது இந்த விளையாட்டு. இந்த விளையாட்டை குழுவாக விளையாடலாம். இந்த விளையாட்டில், ஒரு நபர், ஒரு வார்த்தையை சொல்ல, அந்த வார்த்தையோடு தொடர்புடைய இன்னொரு வார்த்தையை, எதிர் தரப்பு நபர் சொல்வார்.

       உதாரணமாக, FARM என்ற வார்த்தை சொல்லப்பட்டால், அதற்கு தொடர்புடைய ANIMAL என்ற வார்த்தை எதிர்தரப்பால் சொல்லப்படும். அதேசமயம், பயன்படுத்தப்படும் வார்த்தைகள், விளையாட்டில் பங்கேற்கும் குழந்தைகளின் அறிவுக்கும், சிந்தனைக்கும் ஏற்றதாக இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.


SCRABBLE (ஸ்க்ரேபெல்)


          குடும்ப அளவில், மிகவும் விரும்பப்படுகிற ஒரு விளையாட்டாக, இந்த விளையாட்டு கருதப்படுகிறது. பல்வேறு காரணங்களுக்காக, இந்த விளையாட்டு ரசிக்கப்படுகிறது. டென்சன் நிறைந்த உலகில், பல பழைய போரடிக்கும் விளையாட்டுக்கள், நடைமுறையிலிருந்து மறைந்து வருகின்றன.

       இந்த விளையாட்டில், குழந்தைகளை ஈடுபடச் செய்து, சிறிதுகாலம் கழித்து, ஸ்பெல்லிங் விஷயத்தில் அவர்களின் செயல்பாட்டை கவனித்தால், முன்னேறியிருப்பதை அறியலாம்.

TRACING WORDS (ட்ரேசிங் வோர்ட்ஸ்)

     பொதுவாக, ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ளும்போது, ஒரே வழிமுறையைவிட, பல வழிமுறைகள் பின்பற்றப்படும்போது, அதை, குழந்தைகள் எளிதாக கற்றுக்கொள்கிறார்கள். இது ஒரு மிக எளிமையான, எப்போதும் விளையாடக்கூடிய விளையாட்டு.

    குழந்தைகளுக்கு, உங்களின் முதுகில், அவர்களுக்கு பிடித்த வார்த்தைகளை எழுதச் சொல்லி, அது என்னவென்று நீங்கள் உணர்ந்து சொல்லலாம். இதன்மூலம் அவர்கள் உற்சாகம் பெறுவார்கள். மேலும், அவர்களது முதுகில், நீங்கள், சில வார்த்தைகளை எழுதி, அதை கண்டுபிடிக்கச் செய்து, அவர்களின் ஸ்பெல்லிங் திறனை வளர்க்கலாம்.

CROSSWORDS (கிராஸ் வோர்ட்ஸ்)

       மேற்குறிப்பிட்ட பயிற்சி, ஒருவரின் ஸ்பெல்லிங் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான சிறப்பான ஒரு உபாயம். இன்று, அதிகளவில் puzzle புத்தகங்கள் கிடைக்கின்றன மற்றும் வலைதளத்தில், crossword - creating உபகரணங்கள் கிடைக்கின்றன. இந்த விளையாட்டு விஷயத்தில், இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.

        வார்த்தைகள், உங்களது குழந்தையின் அறிவு நிலைக்கேற்ப இருக்க வேண்டும். குழந்தைகளால் புரிந்துகொள்ள இயலாத கடின வார்த்தைகளாக இருப்பின், அவர்கள் அந்த விளையாட்டின் மீது, விரைவில் ஆர்வத்தை இழந்து விடுவர்.

SPELLING CHAIN (ஸ்பெல்லிங் செயின்)

          இதுவும் ஸ்பெல்லிங் திறன் மேம்பாட்டிற்கான ஒரு சிறந்த அம்சமாகும். வார்த்தைகளிலிருந்து, உங்களின் குழந்தை எளிதில் கண்டுபிடிக்க இயலாத, ஒரு பாடல் மற்றும் நடனத்தை வரிசைக்கிரமமாக உருவாக்கவும்.
         உங்களால் முழு பாடலையும் பாட முடியாவிட்டாலும், beat -ஐ சேர்த்து, சிறிது ராகத்தோடு ஸ்பெல்லிங் சொல்லவும்.

தொழில்நுட்ப வசதிகள்

           குழந்தைகளின் எளிய கற்றலுக்கு உதவும் வகையில், பலவிதமான எளிய உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள்(apps) இன்று கிடைக்கின்றன. அதை, உங்களது குழந்தையின் ஆர்வத்திற்கேற்ப வாங்கிப் பயன்படுத்தவும்.

FRIDGE MAGNETS (பிரிஜ் மாக்நெட்ஸ்)

           பல வண்ணங்களிலான, எழுத்து உருவங்களைக் கொண்ட காந்தங்களை வாங்கவும். தினமும், ஏதேனும் ஒரு எழுத்தை, பிரிட்ஜில்(Fridge) வைத்துவிட்டு, அதை உங்களிடம் வந்து எடுத்துப் பார்க்க சொல்லுமாறு கூறி விளையாடலாம். இதன்மூலம், ஸ்பெல்லிங் தொடர்பாக குழந்தைகளின் ஆர்வம் அதிகரித்து, அது, அவர்களின் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது.
மேலும், அந்த எழுத்துக்களின் மூலம், ஏதேனும் வார்த்தையை ஒரு இடத்தில் உருவாக்கச் சொல்லிவிட்டு, அதை நீங்கள் சென்று பார்க்கும் விளையாட்டையும் மேற்கொள்ளலாம்.

கதை எழுதுதல்

           குழந்தைகள், அபார கற்பனைத்திறன் மிக்கவர்கள். எனவே, அவர்களிடம் ஒரு சிறிய கதையை எழுதிக் காட்டுமாறு கூறலாம். உங்கள் குழந்தை எழுதும் கதை, பெரும்பாலும் அது எங்கேனும் கேட்டதாகவோ அல்லது படித்ததாகவோ இருக்கலாம்.வேண்டுமானால், ஒரு சில குழந்தைகள், தங்களின் சொந்தக் கற்பனையில் கதை எழுதிக் காட்டலாம். இப்படியாக, தொடர்ந்த பயிற்சியின் மூலமாக, குழந்தையின் ஸ்பெல்லிங் ஆற்றல் வளர்ச்சியடையும்.

குறிப்பு

மேற்கண்ட முறைகள் மட்டுமே குழந்தைகளின் ஸ்பெல்லிங் பயிற்சிக்கு சிறந்தவை என்றில்லை. உதாரணங்களுக்காக கொடுக்கப்பட்டவையே அவை. மற்றபடி, பெற்றோர்கள், தங்களின் சூழலுக்கு ஏற்ப, பெரிய வசதிகள் ஏதுமின்றியே, தங்களின் குழந்தைகளுக்கு சிறப்பான பயிற்சி கொடுக்கலாம்.ஏனெனில், உலகின் மிகச்சிறந்த இலக்கியவாதிகள் மற்றும் மொழி வல்லுநர்களில் பலர், மிகச் சாதாரண பின்னணிகளிலிருந்து, மிகக் குறைந்த வசதிகளைப் பயன்படுத்தி பயிற்சி பெற்றவர்களே. சிலர், பள்ளிக்குக்கூட முறையாக செல்லாதவர்கள் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.எனவே, பெற்றோர்களின் இடைவிடாத அர்ப்பணிப்பே, ஒரு குழந்தையின் ஸ்பெல்லிங் திறன் மேம்பாட்டில் முக்கியப் பங்காற்றுகிறது.



ஆதாரம் : கல்விமலர்