Breaking News

ஆசிரியர் தகுதித் தேர்வின் சான்றிதழ் காலத்தை ஆயுட்காலமாக்க கோரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வின் சான்றிதழ் காலத்தை ஆயுட்காலமாக்க கோரிக்கை

2013 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தகுதித் தேர்வு சான்றிதழும் வழங்கப்பட்டது . தகுதித் தேர்வின் சான்றிதழ் ஏழு ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என அரசு அறிவித்தது. 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் இன்று வரை சுமார் 80,000 க்கும் மேற்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. இதனால் அவர்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வின் தகுதிச் சான்றிதழ் காலாவதியாகும் சூழலை எட்டியுள்ளது . இன்னும் சில மாதங்களில் அவர்களுடைய தகுதித் தேர்வு சான்றிதழ் காலாவதியாக இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. தொடர்ந்து இந்த அரசிடம் 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களுக்கு பணி வாய்ப்பில் முழு முன்னுரிமை அளித்திட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.