ஒவ்வொரு இந்தியர் தலையிலும் எவ்வளவு கடன் இருக்கிறது தெரியுமா?
ஒவ்வொரு இந்தியர் தலையிலும் எவ்வளவு கடன் இருக்கிறது தெரியுமா?
`பல வகைகளில் அரசாங்கத்துக்கு வர வேண்டிய வரிப் பணம் சரிவர வருவதில்லை. இதனால் அரசாங்கம் கடன் வாங்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறது.’
எல்லா நாடுகளுமே மக்கள் நலத் திட்டங்களுக்காகவும் தொழில் வளர்ச்சிக்காகவும் உலக வங்கி மற்றும் உள்நாட்டு வங்கிகளில் கடன் வாங்குவது வழக்கம்தான். கேள்விக்கான விடையைத் தெரிந்துகொள்ள மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள கடன் நிலை ஆய்வறிக்கையை அலசினோம்.
இந்தியா இதுவரை எவ்வளவு கடன் வாங்கியுள்ளது..?
2010-11-ம் நிதியாண்டு முதல் இந்தியாவின் கடன் நிலை பற்றிய ஆய்வறிக்கையை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இந்த ஆய்வறிக்கையின் 8-வது பதிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. அந்தப் பதிப்பில் இந்தியாவின் கடன் குறித்து தகவல் கிடைக்கிறது.
2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை இந்திய அரசு 82,03,253 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது. மேலும், அந்த ஆய்வறிக்கையில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பொதுக் கடன் 51.7% அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மத்தியில், ஐ.நா சபை வெளியிட்ட மக்கள் தொகை கணக்குப்படி இந்தியாவின் மக்கள் தொகை 136.64 கோடி. இந்தியாவின் மொத்தக் கடன் 82,03,253 கோடி ரூபாய் என்றால், ஒவ்வொரு இந்தியக் குடிமகன் தலையிலும் எவ்வளவு கடன் இருக்கிறது?
ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் தலையிலும் தோராயமாக இருக்கும் கடன் தொகை 60,034 ரூபாய்.
மேலும், இந்த ஆய்வறிக்கைகளிலிருக்கும் சில தகவல்களைப் பார்ப்போம்... 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை இந்தியாவின் மொத்தக் கடன் தொகை 54,90,763 கோடியாக இருந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 82,03,253 கோடியாக உயர்ந்துள்ளது.