Breaking News

அரசு பள்ளி ஆசிரியைக்கு முதல்வர் பாராட்டு

அரசு பள்ளி ஆசிரியைக்கு முதல்வர் பாராட்டு
கடலுார் மாவட்டம், அரசு பள்ளி தமிழாசிரி யை மகாலட்சுமிக்கு, முதல்வர் இ.பி.எஸ்., பாராட்டு தெரிவித்து உள்ளார்.

அவர் தன், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:

பள்ளிகள் திறக்காத நிலையில், மாணவர்களின் வீடுகளுக்கே சென்று, அவர்கள் படிப்பதற்கான வழிமுறைகள்; மன அழுத்தம் தவிர்க்க அறிவுரை; பெற்றோருக்கு அறிவுரையும் கூறி வரும், கடலுார் மாவட்டம், நடுவீரப்பட்டு அரசு பள்ளி தமிழாசிரியை மகாலட்சுமியின் செயல், நெகிழ்ச்சி அளிக்கிறது.

மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு, அவர்களின் வீடுகளுக்கே தேடிச் செல்லும் தமிழாசிரியை, மகாலட்சுமியின் சேவைக்கு, என் பாராட்டுக்கள்.இவ்வாறு, முதல்வர் கூறியுள்ளார்.