Breaking News

பள்ளிகள் திறப்பு எப்போது? பெற்றோரிடம் கருத்துகேட்பு

பள்ளிகள் திறப்பு எப்போது? பெற்றோரிடம் கருத்துகேட்பு
கொரோனாவின் தாக்கம் குறையாததால், பள்ளிகள் திறப்பு இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இதற்கிடையில் புதிய மாணவர் சேர்க்கை, கல்வி கட்டணம் வசூல் என தனியார் பள்ளிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில் அரசு பள்ளிகளிலும் மாணவர்சேர்க்கை குறித்து முடிவு எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதற்காக, பெற்றோர்களின் விருப்பத்தை கேட்டறிய பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக, ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு அட்மிஷன் நடத்துவது குறித்தும், ஒன்று முதல், 5 வரை படிக்கும் மாணவர்களுக்கு பாடபுத்தகம் வழங்குவது குறித்தும் பெற்றோர்களிடம் கருத்துகேட்கும் பணி, திருப்பூர் மாவட்டத்தில் துவங்கியுள்ளது.

கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், மாணவர்களின் பெற்றோர்களிடம் எழுத்துப்பூர்வமாக கருத்தினை பெற்று, அவற்றில் சிறந்த நியாயமான கருத்துக்களை தொகுத்து, வட்டார கல்வி அலுவலர்களிடம் (டி.இ.ஓ.,) ஒப்படைக்க வேண்டும்.வகுப்பிற்கு, 2 பெற்றோர்கள் வீதம் கருத்துகள் கேட்கப்படுகின்றன. இறுதி அறிக்கை, முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்படைப்பார்.இவ்வாறு, அவர் கூறினார்.