தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்த தமிழக அரசு புதிய திட்டம்
தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்த தமிழக அரசு புதிய திட்டம்
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு டிவி மூலம் பாடங்கள் நடத்தும் திட்டம் தொடங்க உள்ளதால் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு லேப் டாப்பில் சாப்ட்வேர் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தற்போது ஊரடங்கு காரணமாக வீடுகளில் தங்கி இருக்கின்றனர்.
பள்ளிகள் எப்போது திறக்கும் என்று தெரியாத நிலையில் அவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டில் பாடங்களை நடத்துவதற்காக புதிய ஏற்பாடு ஒன்றை தமிழக பள்ளிக் கல்வித்துறை செய்துள்ளது. இதன்படி டிவி மூலம் மாணவர்களுக்கு பாடங்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
இந்த திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 15ம் தேதி தொடங்கி வைக்க இருக்கிறார். இயைதடுத்து, தமிழகத்தில் இயங்கும் 11 ஆயிரம் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் டிவி மூலம் பாடங்களை படிக்கலாம். பிளஸ் 2 மாணவர்களை பொறுத்தவரையில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள லேப்டாப் மூலம் பாடங்களை படித்துக் கொள்ள வசதியாக அவர்களின் லேப்டாப்களில் புதிய சாப்ட்வேர் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது.
இந்த சாப்ட்வேர்கள் பொருத்தப்பட்ட பிறகு அவர்கள் வீடுகளில் இருந்தபடியே லேப்டாப்களை பயன்படுத்தி பாடங்களை படித்துக் கொள்ள முடியும். அதே நேரத்தில் 14ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியும் தொடங்குகிறது. இதனால் மாணவர்கள் பாடப்புத்தகங்களையும் படித்துக் கொள்ள முடியும். இது தவிர வீடுகளில் உள்ள மாணவர்கள் டிவிக்கள் மூலம் பாட வகுப்புகளை பார்த்துக் கொள்ள முடியும்.