மாணவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்வது எப்படி?
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக .
கற்கும் கல்வியானது சிறப்பாக கற்க வேண்டும் . கற்ற கல்விக்கேற்ற நெறி தவறாது நிற்க வேண்டும் என்ற வள்ளுவர் வாக்கை மனதில் கொள்ளுங்கள் மாணவர்களே! உங்களை சிறப்பாக படிக்க வைக்கும், படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மனஉறுதி இருப்பின் அனைத்தும் சாத்தியம் ஆகும் .
சுயபரிசோதனை :
எதை எங்கு படிக்க வேண்டும் ,எப்படி படிக்க வேண்டும் எந்த மனநிலையில் எது புரியும் எனும் உங்களை பற்றிய சுய பரிசோதனையிருக்க வேண்டும் . என்ன இது என்று யோசிக்கிறீங்களோ. ,ஆம் இது தான் ஃபார்முலா ஒன், ஒரு சிலருக்கு இது இரவு நேரப்படிப்பு தொடர்ந்து படிக்க முடியும் . அதுவே சிலர் அதிகாலை மூன்று மணிநேர படிக்கவே விரும்புவர் . ஒரு சிலர் எதுவானாலும் எப்போதும் ஒருமித்து படிப்பர் மேலும் மதிய உறக்க நேரமென்பதால் கணித சிக்கலகளை தீர்வு காண சிலர் முனைவர் .இன்னும் சிலர் பாட்டுகேட்டு படிக்கும் திறனுடையவறாக இருக்கலாம் . இதைதான் சுய பரிசோதனை என்பார்கள் .
உணவு :
படிக்கும் வேலையில் உணவு அதிகம் உன்பதை தவிர்த்து ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும் . எண்ணெய் பலகாரங்கள் தவிர்த்து முளை கட்டிய பயிர்கள், தினசரி ஊற வைத்த இரண்டு பாதாம் , கோதுமை பண்டங்கள் , நீர் ஆகாரங்கள் , பழங்கள் எடுத்து கொள்ளலாம் . நீர் அல்லது பலரசம் மோர் குடிக்கும்போது உடலில் ஆற்றல் சேமிக்க முடியும் சோர்வு தவிர்க்கலாம் .
பலம் பலவீனமறிதல் :
மாணவர்கள் தங்களுடைய பலமானபாடம் எதுவென அறிய வேண்டும் . பலவீனபாடமும் அறிந்து அந்தபாடத்தில் மதிபெண்கள் பெற முயற்சிக்க வேண்டும் . ஆர்வமுள்ள பாடங்களில் மதிபெண் தக்க வைத்தல் முக்கியமாகும் . படிக்கும்போது ஏற்படும் இடையூறுகளை தொடர்ந்து கவனித்து அவற்றை கலைய வேண்டும் . பெற்றோர்கள், நண்பர்கள், சகோதர சகோதரிகள் உறவினர்கள் எந்தவொரு தலையீடும் ஏற்படாதவாறு கலந்து பேசி அட்டவனைப்படி செயல்படுங்கள் உங்களது கட்டுபாட்டில் சூழல் இருந்தால் அதுவே நலம் .
பாடங்கள் தொடர்பான கேள்விகள்:
கேள்விக்கு விடையறிதல்
பாடங்கள் தொடர்பான சந்தேகங்கள் தீர்த்துகொள்ள தயங்க கூடாது .ஆசிரியர்கள், நண்பர்கள், இணையத்தளம் போன்ற வளங்கள் சந்தேகங்கள் தீர்க்க தயாராக இருக்குபொழுது அத்தகைய வளங்களை தொடர்ந்து பயன்ப்படுத்துங்கள் .
திட்டமிடல் :
சரியான திட்டமிடல் அவசியமாகும் . அத்துடன் ஓய்வு என்பது மிக அவசியமான ஒன்றாகும் சரியான தூக்கம் ஒவ்வொருவருக்கும் அவசியம் . ஒவ்வொரு மணி நேர படிப்பிற்கு பின் ஐந்து நிமிட இடைவேளை தேவை . நீண்ட நேர படிப்பிற்கு பின் மெல்லிசை கேட்கலாம் . அத்துடன் காலாற 20 நிமிடங்கள் நடக்கலாம் . ஒய்வுநேரம் கழித்து மீதமுள்ள நேரங்களை கணக்கிடுங்கள் அதற்கேற்றார்போல் பாடங்களை படியுங்கள். மற்ற வேலைகளையும் செய்வதர்கான நேரங்களை ஒதுக்குங்கள் .
படிப்புடன் விளையாட்டு
மாணவர்களே நீங்கள் விளையாட்டு வீரராக இருக்கலாம் அல்லது மற்ற தனித்திறமைகளில் பங்கேற்பவராக இருக்கலாம் . ஆனால் அவையனைத்தும் திட்டமிட்டு செயல்படுத்தினால் படிப்பு என்பது கவலையளிக்கும் வேலையாக இருக்காது .
குழு படிப்பு :
மாணவர்கள் தங்களுடன் பயிலும் நண்பர்களுடன் படித்தவற்றை பகிரலாம் . மற்ற மாணவர்களுடன் ஒன்றினைந்து பாடங்களை விவாதிக்கலாம் . இது கருத்து பரிமாற்ற்ம் செய்ய உதவுவதுடன் அறியாத பாடங்களை தெரிந்துகொள்ள வழிவகுக்கும் . அறிந்த பாடங்களை நன்றாக மற்றவர்களுடன் கருத்து பரிமாற உதவும் .
"கைதொழில் போல் கல்வி கற்போம் கவலைகளை கலைந்து வெல்வோம் " வாழ்த்துகள் எதிர்காலத்தூண்களே !!!
Post Comment