Breaking News

கை, கால் மூட்டு வலியிலிருந்து விடுதலை பெற முடக்கத்தான் சூப்

கை, கால் மூட்டு வலியிலிருந்து விடுதலை பெற முடக்கத்தான் சூப்

நரம்பு தளர்ச்சி, முடக்குவாதம் போக்க சிறந்த மருந்து!

முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய கீரை வகையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில் அதிகமாக படர்ந்து வளரும் படர் கொடி வகையைச் சேர்ந்தது. இதை மாதம் இரு முறையாவது, உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து விடுதலை பெறலாம்.

முடக்கத்தான் கீரையை சமைத்து சாப்பிட்டால், கீல் பிடிப்பு, கீல் வாதம், கால்களை நீட்டி, மடக்க முடியாமல் இருப்பது, நடக்க முடியாமல் இருப்பது போன்றவை குணமாகும்.கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல், இந்தக் கீரை தடுப்பதால், இதற்கு முடக்கு அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.



இந்த கீரையில் தோசை செய்வதுதான் வழக்கம். துவையலும் செய்யலாம். பச்சைக் கீரை சிறிது கசக்கும். ஆனால் சமைத்தப்பின் அவ்வளவாகத் தெரியாது.

முடக்கத்தான் கீரை தோசை

இரண்டு கப் புழுங்கல் அரிசியை ஊறவைத்து, அத்துடன் இரண்டு கைப்பிடி கீரையையும், சிறிது உப்புடன் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து, தோசைப் போல் செய்து சாப்பிடலாம். இது சற்று மருந்து வாசனையுடன் இருக்கும்.

இரண்டு கைப்பிடி கீரையை, மிக்ஸியில் போட்டு மை போல் அரைத்தெடுத்து, சாதாரணத் தோசைமாவுடன் (ஒரு பெரிய கிண்ணம் அளவு) கலந்து, தோசை செய்தால், கசப்பு சிறிதும் தெரியாது. காரமான சட்னியுடன் சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.இந்தியாவில், 65 சதவிகித மக்கள் மூட்டு வலியினால் பாதிக்கப்படுகின்றனர். இதில், 85 சதவிகிதம் பெண்கள். பல முறைகளில், இந்த நோய்க்கு மூலகாரணம் கண்டுபிடித்து மருந்து அளிப்பதில்லை.

முடக்கத்தான் கீரையின் சிறப்பு:

முடக்கத்தான் கீரையை எண்ணை இட்டு காய்ச்சி மூட்டு வலிக்கு பூசினால் மூட்டு வலி விரைவில் குணமாகும்.முடக்கத்தான் இலைகளை நெய்யில் வதக்கி, இஞ்சி, கொத்தமல்லி, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சட்னி அல்லது துவையல் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் மூட்டு சம்மந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

முடக்கத்தானிலுள்ள தாலைட்ஸ், ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை, இந்திய ஆராய்ச்சியாளகளும், ஆஸ்திரேலிய பல்கலை ஆராய்ச்சியாளர்களும் இணைந்து கண்டுபிடித்துள்ளனர். இதன் சிறப்புக் குணம், நமது மூட்டுகளில் யூரிக் ஆசிட் எங்கிருந்தாலும் அதைக் கரைத்து, சிறுநீரகத்தில் சேர்த்துவிடும்.



சிறுநீர் கழிக்கவேண்டும் என்று சிறுநீரகம் எச்சரித்தவுடன் அதை உடனடியாக செய்யாமல், நாம் அடக்கி வைத்திருப்பது ஆபத்தான ஒன்று என்பதை நாம் அறிவதில்லை. நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்தால் அது உடலின் பிற பகுதிகளுக்கு சென்று விடுகிறது. அவ்வாறு செல்லும்போது, ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலமானது கிரிஸ்டல்ஸ் மூட்டுகளில் படிகிறது. சிறுகச் சிறுக இது சிறு, சிறு கற்களாக உருவெடுத்து, சினோரியல் மெம்கிரேம் என்ற இடத்தில் தங்கிவிடுகிறது. இது பல வருடங்களாக தொடரும் பொழுது சிறுநீரகக் கற்களாகி, சிறுநீரகத்திற்கே ஆபத்தாகிறது.

சிலருக்கு, 35 வயதுக்கு மேல், காலையில், படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலியாயிருக்கும். இதுதான் ருமாட்டாயிட் ஆர்த்ரைட்டிஸின் ஆரம்ப நிலை.அதற்கு இந்த முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசையாக செய்து சாப்பிடலாம். கீரையை கொதிக்க வைத்து சாப்பிட கூடாது. கொதிக்க வைத்தால் அதன் உள்ள மருத்துவ சத்துக்கள் அழிந்து விடும்.

முடக்கத்தான் கீரை சூப் செய்யும் முறை:

முடக்கத்தான் கீரையை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் அலசி ஒரு தடவை அரிந்து ஒரு கோப்பை நீரில் கொதிக்கவைத்து முக்கால் கோப்பை நீராக்கி, அதில் சிறிது உப்பு, மிளகு பொடி போட்டால் சூப் ரெடி. காபி, டீக்கு பதிலாக இந்த சூப்பைக் குடிக்கலாம். இதை தொடர்ந்து காபி, டீக்குப் பதிலாக சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை நெருங்காது.ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் யுனிவர்சிட்டி முடக்கத்தான் கீரையிலுள்ள "தாலைட்ஸ்" ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை அறிந்து, மேலும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டுள்ளார்கள்.

இதன் சிறப்பு குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறு நீரகத்திற்கு அனுப்பிவிடும். இதுபோல் எடுத்துச்சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நம் உடலிலே விட்டு விடுகிறது. இது ஒரு மிக முக்கியமான நம் உடலில் சக்தியை ஏற்படுத்தும். இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. மூட்டுகளுக்கு சக்தியும் கிடைக்கிறது.