நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சேப்பங்கிழங்கு
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சேப்பங்கிழங்கு
இந்த செய்தி தொகுப்பில் சேப்பங்கிழங்கில் உள்ள அற்புத மருத்துவ பயன்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.
1) வழவழப்பான தன்மை கொண்ட சேப்பங்கிழங்கில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்கள் இருப்பதால் பற்கள் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் நல்லது.
2) இந்த கிழங்கில் நார்ச்சத்து அதிகளவில் இருப்பதால் செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகும். அதேப்போல் குடல் புண்கள் குணமாகும்.
3) நரம்பு தளர்ச்சியால் அவதிப்படுபவர்கள் இந்த கிழங்கை சமைத்து சாப்பிடலாம். அதேப்போல் ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
4) சருமம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மிக சிறந்த மருந்தாக இந்த சேப்பங்கிழங்கு செயல்படுகிறது. அதேப்போல் காயங்களை எளிதில் சரிசெய்து விடும். மேலும் வைட்டமின் ஏ, இ ஆகிய சத்துக்கள் இருப்பதால் சரும பாதுகாப்பிற்கு மிகவும் நல்லது.
5)இந்த கிழங்கில் ஆன்டிஆக்சிஜெண்டுகள் மற்றும் வைட்டமின் சி ஆகியன இருப்பதால் ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கைகளை அதிகரிக்கும். அதுமட்டுமல்லாது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.