இலவச காஸ் திட்டம் பற்றிய மத்திய அரசின் அதிரடி அறிவுப்பு
இலவச காஸ் திட்டம் பற்றிய மத்திய அரசின் அதிரடி அறிவுப்பு
மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம் மேலும் 3 மாதம் நீட்டிக்க, பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் தெரிவித்துள்ளார்.
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் கூறியதாவது: பிரதமரின் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்திற்கு 5 கிலோ அரிசி, கோதுமை மற்றும் பருப்பு என 81 கோடி மக்களுக்கு வரும் நவம்பர் வரை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் குடியேறிய ஏழைகளுக்கு வாடகை வீடுகள் கட்டப்பட உள்ளன. இலவச காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம் மேலும் 3 மாதம் வழங்கப்படும்.
வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் ஊழியர்கள், நிறுவனங்கள் செலுத்த வேண்டிய 24 சதவீத தொகையை மத்திய அரசே செலுத்தும் திட்டமும் மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், 72 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.