Breaking News

வரலாற்றில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகள்

வரலாற்றில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகள்
முக்கிய நிகழ்வுகள்

👉 2006ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி அக்னி 3 ஏவுகணை ஒரிசாவில் சோதிக்கப்பட்டது.

👉 2009ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி தமிழக எழுத்தாளர் சி.ஆர்.கண்ணன் மறைந்தார்.

கே.பாலசந்தர்
🎥 தமிழ் திரையுலக இயக்குநர், கே.பாலசந்தர் 1930ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி என்ற கிராமத்தில் பிறந்தார்.

🎥 1964ஆம் ஆண்டு திரைப்படத்திற்கு வசனம் எழுதி, சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அதற்கு அடுத்த ஆண்டில் இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம் நீர்க்குமிழி மகத்தான வெற்றி பெற்றது.

🎥 இவர் 'கவிதாலயா' என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி ஏராளமான நடிகர்இ நடிகைகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.

🎥 இவர் பத்மஸ்ரீ விருது, தாதா சாகேப் பால்கே விருது (2010), தேசிய விருதுகள், மாநில அரசின் விருதுகள், அறிஞர் அண்ணா விருது, கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

🎥 திரையுலகில் வெற்றி உலா வந்த கலையுலக பாரதி கே.பாலசந்தர் 2014ஆம் ஆண்டு மறைந்தார்.