கலை, அறிவியல் படிப்புகளில் சேர 38 மையங்கள்
கடந்த 16 ஆம் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியானது. முதல் முறையாக கலை, அறிவியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
கலை, அறிவியல் படிப்புகளில் சேர www.tngasa.in மற்றும் www.tndceonline.org என்ற இணையதளங்களில் ஜூலை 20 ஆம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தொழில்நுட்ப கல்லூரிகளில் சேர www.tngptc.in மற்றும் www.tngptc.com என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். மேலும் இதுகுறித்த சந்தேங்கள் இருந்தால் 044-22351014 மற்றும் 044-223510115 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்திலுள்ள கலை, அறிவியல் படிப்புகளில் சேருவதற்கு 38 மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.