Breaking News

Admission Details For Government Arts and Science Colleges& Government Polytechnic Colleges-2020

Admission Details For Government Arts and Science Colleges& Government Polytechnic Colleges-2020
அரசு கலை அறிவியல் கல்லூரிகள் (Government Arts and Science Colleges), அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் (Government Polytechnic Colleges)சேர்வதற்கான விண்ணப்பம் இந்த ஆண்டு முதல் இணையதளம் வழியாக பதிவு செய்ய வேண்டும் என உயர்கல்வி துறை அறிவித்துள்ளது 

தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் கீழ் தற்பொழுது 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகள்(Government Arts and Science Colleges), இயங்கி வருகின்றது. இவற்றில் சுமார் 92,000 இளநிலை பட்ட வகுப்பு சேர்க்கை இடங்கள் உள்ளன. இதற்கு சுமார் 2 இலட்சம் மாணாக்கர்கள் ஆண்டு தோறும் விண்ணப்பிப்பார்கள். 

இதுபோன்று தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் கீழ் தற்பொழுது 51 அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகள் இயங்கி வருகின்றது. மற்றும் தொழில் வணிகத் துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் கல்வி பாடத்திட்டத்திலும் வரக்கூடிய 3 இணைப்பு கல்லூரிகளையும் சேர்த்து மொத்த ஒப்பளிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 16,890. இதற்கு தோராயமாக 30,000 மாணாக்கர்கள் ஆண்டு தோறும் விண்ணப்பிப்பார்கள்.

பொதுவாக மாணவர்கள் தாங்கள் சேர விரும்பும் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பக் கட்டணங்களை வங்கி வரைவோலையாக இணைத்து தபாலிலோ நேரிலோ சமர்ப்பிப்பார்கள். இதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை மாணாக்கர்கள் கல்லூரிகளுக்கு வரவேண்டிய சூழ்நிலை உள்ளது 

தற்போது கொரோன பரவல் அதிகம் உள்ள நிலையில் மாணவர்கள் பாதுகாப்பு கருதியும் ,நிவாக நடைமுறைகள் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு முதல் அரசு கலை கல்லூரிகள் (Government Arts and Science Colleges), மற்றும் அரசு பலவகை தொழில் நூட்பக் கல்லூரிகள் கல்லூரிகளில் (Government Polytechnic Colleges)மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பம் இனையதளம் வழியாக பதிவு செய்யபடும் என தமிழக அரசு அறிவித்துள்ளது 

அதன் அடிப்படையில் மாணவர்கள் 20.07.2020 தேதிமுதல் கீழ் கண்ட இனையதளத்தில சென்று விண்ணப்பத்தினை பதிவு செய்துகொள்ளலாம் 

1.அரசு கலை அறிவியல் கல்லூரிகள் -Government Arts and Science Colleges
www.tngasa.in 
www.tndceonline.org

2.அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் -Government Polytechnic Colleges
www.tngptc.in 
www.tngptc.com 

மாணவர்கள் மற்றும் பெற்றோர் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள கட்டுப்பாட்டு அறை எண்களை அறிவிக்கபட்டுள்ளது
044-22351014
044-22351015