இந்த 8 விஷயத்த கடைபிடிச்சாலே இதய பிரச்சினை, மாரடைப்புலாம் வரவே வராதாம்
இந்த 8 விஷயத்த கடைபிடிச்சாலே இதய பிரச்சினை, மாரடைப்புலாம் வரவே வராதாம்
தற்போதைய வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம், மதுப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் இவற்றால் ஏராளமானோர் இதய நோய்களை சந்தித்து வருகின்றனர். இதை எப்படி விரட்டலாம் மற்றும் இதய நோய்கள் வருவதை தடுக்க சில வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் இரத்தத்தை பாய்ச்சுவதில் இருந்து இரத்தத்தை சுத்திகரிப்பு செய்யும் வரை அனைத்து வேலைகளையும் செய்வதில் நம் இதயம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நம்முடைய இதயம் ஆரோக்கியமாக இருந்தால் தான் உடம்பில் மற்ற உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், மதுப்பழக்கம், புகைப்பழக்கம் மற்றும் கொலஸ்ட்ரால் உணவுகள் இவற்றால் நாம் இதய ஆரோக்கியத்தை இழந்து வருகிறோம். இதனால் சிறு வயதிலேயே இதய நோய்கள், ஹார்ட் அட்டாக் போன்ற இதய பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. எனவே நம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 10 விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
மதுப்பழக்கத்தை தவிருங்கள்
மிதமான குடிப்பழக்கம் இதயத்திற்கு நன்மை அளிக்கும் என்று ஆய்வுகள் கூறினாலும் அதிகப்படியான குடிப்பழக்கம் இதயத்திற்கு நல்லது கிடையாது. மேலும் அதிகப்படியான குடிப்பழக்கத்தால் உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் கரோனரி தமனி நோய்களுக்கான ஆபத்து அதிகம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே உங்க மதுப்பழக்கத்தை தவிர்ப்பது இதயத்திற்கு நல்லது.
இதய பரிசோதனை செய்யுங்கள்
உங்கள் கொழுப்பின் அளவு, இரத்த அழுத்தம் மற்றும் ஈ.சி.ஜி பரிசோதனையை பெறுங்கள். 30 வயதிற்குப் பிறகு ஒவ்வொருவரும் இந்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மார்பு வலி, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, மூச்சுத் திணறல், தலைச்சுற்றல் அல்லது அசெளகரியம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் ஒருபோதும் தாமதிக்காதீர்கள். உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.
கீரைகள் மற்றும் பழங்கள்
அதிக கீரைகள் மற்றும் பழங்கள் கெட்ட கொழுப்புக்களை குறைக்கிறது. இது அவர்களின் செரிமான அமைப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. ஒரு நாளில் 400 கிராம் அளவிற்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். நிறைவுறா கொழுப்புகள், மோனோ-நிறைவுறா கொழுப்பு உணவுகளான ஆலிவ் எண்ணெய், கொட்டைகள், வேர்க்கடலை எண்ணெய் மற்றும் பாலி-நிறைவுறா உணவுகளான எள், பருத்தி விதை மற்றும் சோயா பீன் எண்ணெய்கள் போன்ற உணவுகள் மோசமான கொழுப்பு (எல்.டி.எல்) அளவைக் குறைப்பதற்கும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிப்பதற்கும் உதவுகிறது. பல உணவியல் வல்லுநர்கள் ஆலிவ் எண்ணெய், அரிசி தவிடு எண்ணெய் அல்லது பிற ஆரோக்கியமான எண்ணெய்களுக்கு மாற பரிந்துரைக்கின்றனர். மீன் எண்ணெய்கள், பால் கலவைகள், ஆளி விதைகள் மற்றும் நட்ஸ் வகைகள் நம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
உப்பு அளவை குறைக்க வேண்டும்
உணவில் அதிகமாக உப்பு சேர்ப்பது உங்க இரத்த அழுத்தத்தை உயர்த்தும். உயர் இரத்த அழுத்தம் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது கிடையாது. ரொட்டி, வெண்ணெய் அல்லது நூடுல்ஸ் போன்ற உணவுப் பொருட்களில் அதிகளவில் உப்பு சேர்க்கப்படுகிறது. அதே மாதிரி சர்க்கரை பொருட்களும் இதய ஆரோக்கியத்தை கெடுக்கக் கூடியவைகளாக உள்ளன. இது உடல் பருமனை அதிகரிக்கிறது. கேக்குகள், மில்க் ஷேக்ஸ், ஸ்வீட்ஸ், இனிப்பு வகைகள், ஐஸ்க்ரீம்கள், இனிப்பு பானங்கள் போன்றவற்றில் அதிகளவு சர்க்கரைகள் சேர்க்கப்படுகிறது. எனவே இந்த மாதிரியான பானங்களை தவிர்த்து இயற்கையான சர்க்கரையை பெற பழங்களை எடுத்துக் கொள்ளலாம். இது உங்க இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
உடல் செயல்பாடுகள்
தற்போதைய உடல் பருமன் தொற்றுநோய்க்கு தாமஸ் எடிசனின் ஒளி விளக்கு காரணம் என்று நகைச்சுவையாக கூறப்படுகிறது. காரணம் எப்பொழுதும் கடிகார நேரத்தைச் சுற்றியே ஓடிக்கொண்டு இருக்கிறோம். ஆரம்பத்தில் நம் உடலின் உள் கடிகாரம் இயற்கையான பகல்-ஒளி அட்டவணைக்கு ஏற்றதாக இருந்தது. ஆனால் தற்போதைய வாழ்க்கை முறை மாறி விட்டது. உடல் செயல்பாடுகள் இல்லாத வேலைகளில் பகல் முழுவதும் ஈறுபடுகிறோம். இரவில் சரியான நேரத்தில் தூங்குவதும் கிடையாது. பகல் முழுவதும் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்வது உங்களுக்கு உடல் பருமன், குளுக்கோஸ் வளர்சிதை மாற்றம், இரத்த அழுத்தம் போன்றவற்றை அதிகரிக்கிறது. இதய நோய்களை விரட்ட நல்ல தூக்கம் பெறுவது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
புகைப்பிடித்தலை தவிருங்கள்
இந்தியாவின் 285 மில்லியன் புகைப்பிடிப்பவர்களில் 92 மில்லியன் பேர்கள் அது இதய பாதிப்பை உண்டாக்கும் என்பதை அறிந்திருக்கவில்லை. புகைப்பிடிக்கும் பழக்கம் இதய நோயால் பாதிக்கப்படுவதை 2-4 மடங்கு வரை அதிகரிக்கிறது. புகைபிடித்தல் நுரையீரல் புற்றுநோய்க்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் இரண்டாவது கை புகைப்பழக்கம் 600,000 பேரைக் கொல்கிறது, இதில் 100,000 குழந்தைகள் மற்றும் இரண்டாவது புகை காரணமாக 87% இறப்புகள் இருதய நோய்களால் ஏற்படுகின்றன. எனவே உங்களுக்காக இல்லாவிட்டாலும் உங்களுக்கு அருகில் உள்ள அன்பானவர்களுக்காக நீங்கள் புகைப்பிடிப்பதை தவிர்ப்பது நல்லது.
மன அழுத்தத்தை விரட்டுங்கள்
உடல் பருமன், இரத்த அழுத்தம், இதய நோய், புகைபிடித்தல், உடற்பயிற்சியின்மை, தூக்கமின்மை போன்றவற்றைப் போல மன அழுத்தமும் இதய நோய்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே உங்க மன அழுத்தத்தை தூரமாக வைப்பது உங்க இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்யும். மன அழுத்தத்தை விரட்ட உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கை எடுத்துக் கொள்ளுங்கள். உங்க குழந்தைகளுடன் விளையாடுங்கள், தியானத்தை மேற்கொள்ளுங்கள். இவை உங்க மன அழுத்தத்தை தடுக்க உதவும்.
டிரான்ஸ் கொழுப்பு உணவுகள் வேண்டாம்
இரண்டு வகையான கொழுப்புகள் நிறைவுற்ற மற்றும் நிறைவுறாத கொழுப்புகள் உள்ளன. வெண்ணெய், சிவப்பு இறைச்சி, பால் பொருட்கள், சாக்லேட்டுகள் போன்ற உணவுப் பொருட்களில் நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளன.மேலும் அவை எல்.டி.எல் அல்லது மோசமான கொழுப்பின் அளவை உயர்த்துகிறது. எனவே இந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் நிறைவுறா கொழுப்புகள், அவை ஒரே விளைவைக் கொண்டுள்ளன. தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களில் பொதுவாக நிறைய டிரான்ஸ் கொழுப்புகள் உள்ளன. அதனால்தான் அவற்றைத் தவிர்க்க ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.