Breaking News

மேலும் 47 சீன செயலிகளுக்குத் தடை விதிக்க மத்திய அரசு முடிவு; பட்டியலில் பப்ஜி?

    ஏற்கெனவே 59 சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 47 செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 


     இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப கொள்கை விதிகளை மீறியதாக 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து கடந்த மாதம் அறிவித்தது. இதில், டிக்டாக், ஷேர் இட், யூசி பிரௌசர், கேம் ஸ்கேனர், வீ சாட் உள்ளிட்ட மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய செயலிகளும் அடங்கும். 



    இதையடுத்து, ஏற்கெனவே தடை செய்யப்பட்ட செயலிகளுடன் தொடர்புடைய மேலும் 47 சீன செயலிகளுக்குத் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் பிரபல ஆன்லைன் விளையாட்டான பப்ஜி, அலி எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தடை செய்யப்படவுள்ள செயலிகளின் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. 

    இந்த 47 சீன செயலிகளும் முன்னதாக தடைசெய்யப்பட்ட செயலிகளின் குளோன்களாக இயங்குவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



     இதுதவிர மேலும் 250க்கும் மேற்பட்ட சீன செயலிகள் குறித்த பயனர்களின் தனியுரிமை மற்றும் தேசிய பாதுகாப்பு மீறல் ஆகியவை குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.