Breaking News

24 மணி நேரத்தில் கொரோனாவை சரி செய்வதாக வைரலாகும் ஆயுர்வேத கஷாயம்!

24 மணி நேரத்தில் கொரோனாவை சரி செய்வதாக வைரலாகும் ஆயுர்வேத கஷாயம்!
சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்களில் இந்த கஷாயம் குடித்தாலே கொரோனா வைரஸ் பாதிப்பு சரியாகிடும் என கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்களில்- எலுமிச்சை சாறு, கிராம்பு, மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி உள்ளிட்டவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, பின் இதனை குடித்தால் கொரோனா வைரஸ் தொற்று சரியாகிடும் என கூறும் புகைப்படம் அதிகளவில் பகிரப்பப்பட்டு வருகிறது.

வைரல் புகைப்படத்தில், கஷாயம் அல்லது கதா என அழைக்கப்படும் ஆயுர்வேத நீர் மருத்துவ தேநீர் என்றும் அழைக்கப்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் பொருட்களை சரியான விகிதத்தில் சேர்த்து கஷாயம் செய்து குடிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த தகவலை அலோபதி மருத்துவர் பரிந்துரைத்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கஷாயத்தை குடித்த நபருக்கு கொரோனா தொற்று 24 மணி நேரத்தில் சரியாகிவிட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை ஆய்வு செய்ததில், இந்த கஷாயம் கொரோனா வைரஸ் தொற்றை சரி செய்துவிடும் என எந்த மருத்துவரும் பரிந்துரைக்கவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் இந்த கஷாயம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் என ஆயுர்வேத வல்லுநர் தெரிவிக்கிறார். எனினும், இது கொரோனா வைரஸ் தொற்றை சரி செய்யும் என இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

அந்த வகையில் வைரல் தகவல்களில் உள்ளது போன்று கஷாயம் குடித்தால் கொரோனா நோய் தொற்று சரியாகி விடும் என்பது முற்றிலும் பொய் என உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.