Breaking News

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் நடத்த தயார் நிலையில் உள்ளது கல்வி டிவி

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் நடத்த தயார் நிலையில் உள்ளது கல்வி டிவி
பள்ளிகளை திறக்க, கால தாமதம் ஏற்பட்டு உள்ளதால்,அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி தொலைக்காட்சி வாயிலாக,பாடங்களை ஒளிபரப்ப, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.கொரோனா பிரச்னையால், பள்ளிகள் திறப்பு தொடர்ந்து தாமதமாகிறது.

செப்டம்பரில் பள்ளிகளை திறக்க முடியுமா என்பதே, கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில், தனியார் பள்ளிகள், தங்கள் மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக பாடங்களை நடத்தி வருகின்றன. ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஆன்லைன் வழியில் பாடங்களை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.எனவே, இந்த ஆண்டு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, முதற் கட்டமாக, கல்வி தொலைக்காட்சி வழியே பாடங்களை நடத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கான படப்பிடிப்புகள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி., வழியே மேற்கொள்ளப்படுகின்றன.

இன்னும் இரண்டு வாரங்களுக்குள், முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து, கல்வி தொலைக்காட்சியில், பிளஸ் 2 பாடங்கள் நடத்தப்பட உள்ளன.இதையடுத்து, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட உள்ளதாக, பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.