Breaking News

வரும் 15ம் தேதி 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு

வரும் 15ம் தேதி 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அரசு அறிவுறுத்தியது.

அதன் படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் வரும் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகளும் அதற்கு பிறகு தான் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அரசுப் பள்ளிகளில் வரும் 13ஆம் தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தனியார் பள்ளிகள் போன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம் கற்பிக்கப்படும் என்று கூறியுள்ள அவர் தனியாா் தொலைக்காட்சிகள் ஒவ்வொரு பாடத்திற்கு ஒரு சேனல் என 5 தொலைக்காட்சிகளில் ஔிப்பரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்களை மாணவா்களுக்கு வழங்கியவுடன் இத்திட்டம் செயல்படத்தொடங்கும்.

இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி முதல் புத்தக விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக விலகலை பின்பற்றி வழங்க பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ள நிலையில் 12ம் வகுப்பு மாணவர்கள் அரசு வழங்கிய இலவச மடிக்கணினியை எடுத்து வர அறிவுறுத்தியுள்ளது. ஆன்லைன் கல்விக்கான பிரத்யேக மென்பொருளை மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் மென்பொருள் பதிவேற்றத்திற்கு ஒரே நேரத்தில் அதிக மாணவர்களை வரவழைக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளது.