+2 மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவுப்பு
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி தொடங்கி மார்ச் 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. அந்த சமயத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்பட காரணங்களாலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் நிறைய மாணவர்கள் தேர்வை எழுதவில்லை. அதனால் அவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
அதன்படி வரும் ஜூலை 27 ஆம் தேதி மீண்டும் எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. மேலும் ஜூலை 13 முதல் 17ஆம் தேதி (நேற்று) வரை இந்த தேர்வுக்கான புதிய ஹால் டிக்கெட்டை www.dge.tn.go.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. நேற்றுடன் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் கால அவகாசம் முடிந்து விட்டது.
இதனிடையே அறிவிக்கப்படாமல் இருந்த 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் திடீரென யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியிடப்பட்டது.. தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என்று யோசித்து கொண்டிருக்கின்றனர்..
இந்த நிலையில் வருகின்ற 27ஆம் தேதி தேர்வு எழுதும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த மாத இறுதியில் முடிவுகள் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அந்த தேர்வை எழுதினால் தான் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும். மேலும் செல்போன் மற்றும் கணினி வழியாக பாடங்களை பதிவிறக்கம் செய்து படிக்கும் நிலை 2 ஆண்டுகளில் உருவாக்கப்படும் என்றார்.