கேரளாவில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ 10 ஆயிரம் அபராதம்- 2 ஆண்டுகள் சிறை.
கேரளாவில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ 10 ஆயிரம் அபராதம்- 2 ஆண்டுகள் சிறை.
கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது ஓராண்டுக்கு கட்டாயக்கி அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணியாதவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றும், பொது இடங்களில் எச்சில் துப்புவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
திருமணங்களில் 50 பேருக்கும், இறுதிச் சடங்குகளில் 20 பேருக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
மாநிலத்திற்குள் பயணிக்க இ பாஸ் தேவையில்லை.
வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் அரசின் ஜாக்ரதா இ சேவையில் தங்களை பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டல்களை கேரள அரசு அறிவித்துள்ளது.