மாவட்ட கல்வி அலுவலருக்கு கொரோனா!
மாவட்ட கல்வி அலுவலருக்கு (DEO) கொரோனா!
வாணியம்பாடி DEO உட்பட 10 பேருக்கு இன்று கொரோனா உறுதி: பெரியப்பேட்டை -3, வாணியம்பாடி -1 வள்ளிப்பட்டு-1, ஆம்பூர் -4, பேர்ணாம்பட்டு-1
வாணியம்பாடி: மாவட்ட கல்வி அலுவலருக்கு (DEO) கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆம்பூர், வாணியம்பாடி, ஆலங்காயம் சுற்றுப்புற பகுதியில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் - சுமார் 40 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர், தலைமை ஆசிரியர்கள் ஆம்பூர் மையத்தில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதை ஆய்வு செய்ய தினமும் ஆம்பூர் பள்ளிக்கு DEO நேற்று வரை வந்து சென்றுள்ளார்.