Breaking News

அரசு உதவியில்:தனியார் துறையில் வேலை!

அரசு உதவியில்:தனியார் துறையில் வேலை!




  வேலை தேடுபவர்கள், வேலை அளிக்கும் தனியார் நிறுவனங்களை, இணைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தை பயன்படுத்தி கொள்ள திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தனியார்துறை வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் நோக்கத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் வேலைவாய்ப்புப்பிரிவால், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் தமிழக முதல்வரால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

 தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள் இந்த இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்து தங்களது கல்வித்தகுதி, முன் அனுபவம் ஆகியவற்றுக்கு ஏற்ப பணி வாய்ப்புகளை பெறலாம். தனியார்துறை சார்ந்த அனைத்து சிறு,குறு நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் காலிபணியிடங்களை இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்து அப்பணிக்காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து பணிநியமனம் வழங்க, இந்த இணையதளம் வழிவகை செய்கிறது.எனவே, இச்சேவையை திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வேலை தேடுபவர்களும், வேலையளிப்பவர்களும், பயன்படுத்தி கொள்ளலாம் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.