இவைகள் இயங்கும் இன்றும் நாளையும் மக்கள் கவலை பட வேண்டாம்.
இவைகள் இயங்கும் இன்றும் நாளையும் மக்கள் கவலை பட வேண்டாம்.
சென்னை உட்பட, முழு ஊரடங்கு அமலில் உள்ள மாவட்டங்களில், வங்கிகள் அனைத்தும், இன்றும், நாளையும் இயங்கும். மாதக் கடைசி என்பதால், குறைந்த ஊழியர்களுடன், இந்த இரண்டு நாட்களிலும், அனைத்து வங்கிகளும், மாலை, 4:00 மணி வரை செயல்பட, அரசு அனுமதி அளித்துள்ளது.
மாதக் கடைசி என்பதால், இன்றும், நாளையும், 33 சதவீத ஊழியர்களுடன், அனைத்து வங்கிகளும், மாலை, 4:00 மணி வரை, வழக்கம் போல செயல்படும்; பொதுமக்கள் சேவைக்கும், அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம், அரசு அறிவிக்கும் ஊரடங்கை பொறுத்தே, வங்கிகள் தொடர்ந்து செயல்படுமா என்பது தெரிய வரும்.
இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறுகையில், 'வங்கிகள் இன்றும், நாளையும் வழக்கம் போல, மாலை வரை செயல்படும். 'ஒரு வாரமாக வாடிக்கையாளர்களுக்கு, நேரடி சேவை கிடையாது. அதனால், யாரும் வரவில்லை. இன்று அனுமதி உண்டு என்பதால், அதிகமானோர் வங்கிகளுக்கு வரக் கூடும்' என்றனர்.