Breaking News

ஊரடங்கு முடிந்து இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மீண்டும் நாம் இயக்கும் போது சில பிரச்னைகள் எழலாம் - அதில் இருந்து தப்புவது எப்படி?

    கொரோனா பரவல் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருப்பதால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சாலைகளுக்குள் சில நாட்களாக பிரவேசிக்காமல் உள்ளன. ஊரடங்கு முடிந்து அவற்றை மீண்டும் நாம் இயக்கும் போது சில பிரச்னைகள் எழலாம். அதில் இருந்து எப்படி தப்புவது என்பதற்கு சில டிப்ஸ்கள் இதோ. பொதுவாக மழைக்காலத்தில் தான் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் வைத்திருப்போருக்கு நிறைய சிக்கல்கள் இருக்கும். ஆனால் நீண்ட நாட்களாக வாகனத்தை இயக்காமல் வைத்திருந்தாலும் பல பிரச்சனைகள் வரும்.


   தற்போதைய சூழலில் அனைவரது இல்லங்களிலும் கட்டாயம் இடம்பிடித்திருக்கும் பொருட்களில் ஒன்று பைக். இவை பெரும்பாலும் செல்ஃப் ஸ்டார்ட் முறையில் இயங்குபவையாகவே உள்ளன. சாதாரண நாட்களிலேயே பைக்குகளில் ஸ்டார்டிங் பிரச்னை இருக்கும் என்ற சூழலில், 21 நாட்களுக்கு பின் பைக்கை ஸ்டார்ட் செய்வது நிச்சயம் எளிதாக இருக்காது. வாய்ப்பு கிடைத்தால் வண்டியை ஏற்கெனவே நிறுத்தியுள்ள இடத்தில் இருந்து சற்று தள்ளி நிறுத்துவது, கார் டயர்களுக்கு கீழ் பலகை வைப்பது,3 நாட்களுக்கு ஒருமுறை சில நிமிடங்கள் வாகனத்தை ஸ்டார்ட் செய்ய வேண்டும்.


    சூரிய வெளிச்சம் படாத இடத்தில் வாகனத்தை நிறுத்தி வைக்கவும், ஹேண்ட் பிரேக் போட்டு காரை நிறுத்துவதை தவிர்க்கவும், பைக்கை உதைத்து ஸ்டார்ட் செய்தால் பேட்டரியை மிச்சப்படுத்தலாம் என சில எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே வாகன பழுதிற்கு செலவு செய்யும் ஒரு சிறிய தொகையையாவது நிச்சயம் நம்மால் சேமிக்க முடியும்.